Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1306

இன்பத்துப்பால்கற்பியல்131. புலவி

துனியும் புலவியும் இல்லாயின் காமம்கனியும் கருக்காயும் அற்று.

tuniyum pulaviyum illAyin kAmamkaniyum karukkAyum aRRu

Swetha Bhamidipati

பொருள் / உரை

முருகா எளிய உரை

காதல் வாழ்க்கையில் ஆழமான ஊடலும் மெல்லிய சிறு பிணக்குகளும் இல்லையென்றால், அந்தக் காதல் மிகவும் கனிந்து நைந்துபோன பழம் போலவும், பக்குவப்படாத இளங்காயைப் போலவும் சுவையற்றதாகி விடும்!

• துனியும் புலவியும் இல்லாயின் = காதல் வாழ்க்கையில் முதிர்ந்த ஊடலும் மெல்லிய சிறு ஊடலும் இல்லையென்றால்;• காமம் = அந்தக் காதலானது;• கனியும் கருக்காயும் அற்று = மிகவும் கனிந்து அழுகிவிட்ட பழம் போலவும், பக்குவப்படாத இளம்பிஞ்சு காயைப் போலவும் சுவையற்றதாகி விடும்!

மு.வரதராசன்

பெரும் பிணக்கும் சிறு பிணக்கும் இல்லாவிட்டால், காமம் மிகப் பழுத்த பழமும் முற்றாத இளங்காயும் போல் பயன்படாததாகும்.

பரிமேலழகர்

(இதுவும் அது.) துனியும் புலவியும் இல்லாயின் - முதிர்ந்த கலாம் ஆகிய துனியும், இளைய கலாம் ஆகிய புலவியும் இல்லையாயின்; காமம் கனியும் கருக்காயும் அற்று - காமம் செவ்வி முதிர்ந்த பழமும் இளங்காயும் போலும். (மிகமுதிர்ந்திறும் எல்லைத்தாய கனி நுகர்வார்க்கு மிகவும் இனிமை செய்தலின் துனியில்லையாயின், 'கனியற்று' என்றும், கட்டிளமைத்தாய காய் நுகரும் செவ்வித் தன்றாகலின் புலவியில்லையாயின் 'கருக்காயற்று' என்றும் கூறினான். இவ்விரண்டும் வேண்டும் என்று வியந்து கூறியவாறு.)

சாலமன் பாப்பையா

வளர்ந்த ஊடலாகிய துனியும், இளம் ஊடலாகிய புலவியும் இல்லாது போய்விட்டால், காதல் நிறைந்த இல்லறம், முதிர்ந்த பழமும் இளங்காயும் போல் ஆகிவிடும்.

Meaning in English

Love without hatred is ripened fruit; Without some lesser strife, fruit immature

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout