Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1305

இன்பத்துப்பால்கற்பியல்131. புலவி

நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகைபூஅன்ன கண்ணார் அகத்து.

nalattakai nallavark kEer pulattakaipUvanna kaNNAr akattu

Amirthavarshini

பொருள் / உரை

முருகா எளிய உரை

நற்குணங்கள் நிறைந்த சிறந்த ஆடவருக்கு மேலும் அழகும் இன்பமும் தருவது எதுவென்றால், மலர் போன்ற கண்களை உடைய காதலியின் நெஞ்சத்தில் உண்டாகும் மென்மையான ஊடலின் அழகே ஆகும்!

• நலத்தகை நல்லவர்க்கு ஏர் = நற்குணங்கள் நிறைந்த சிறந்த தலைவருக்கு அழகும் இன்பமும் தருவது எதுவென்றால்;• பூ அன்ன கண்ணார் அகத்துப் புலத்தகை = மலர் போன்ற கண்களை உடைய காதலியின் நெஞ்சத்தில் தோன்றுகின்ற மென்மையான ஊடலின் சிறப்பே ஆகும்!

மு.வரதராசன்

நல்ல பண்புகள் அமைந்த நல்ல ஆடவர்க்கு அழகு, மலர் போன்ற கண்களை உடைய மகளிரின் நெஞ்சம் விளையும் ஊடலின் சிறப்பே ஆகும்.

பரிமேலழகர்

(தலைமகளைப் புலவி நீக்கிக் கூடிய தலைமகன் தன்னுள்ளே சொல்லியது) நலத்தகை நல்லவர்க்கு ஏர் - நற்குணங்களால் தகுதியுடையராய தலைவர்க்கும் அழகாவது; பூ அன்ன கண்ணார் அகத்துப் புலத்தகை - தம் பூவன்ன கண்ணார் நெஞ்சின்கண் நிகழும் புலவி மிகுதியன்றே (சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. 'தவறில்லார்க்கும் புலவி இனிது' என்பான், 'நலத்தகை நல்லவர்க்கும்' என்றான். அழகு - இன்பப் பயனைத் தலைப்படுதல் தான் நுகர்ந்த இன்பத்திற்கு ஏதுவாகிய புலவியை வியந்து கூறியவாறு.)

சாலமன் பாப்பையா

நல்ல குணங்களால் உயர்ந்தவருக்கு அழகு தருவது, பூப்போன்ற கண்ணை உடைய மனைவியின் மனத்தே நடக்கும் ஊடலின் மிகுதியே.

Meaning in English

Even to men of good and worthy mind, the petulance Of wives with flowery eyes lacks not a lovely grace

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout