Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1304

இன்பத்துப்பால்கற்பியல்131. புலவி

ஊடி யவரை உணராமை வாடியவள்ளி முதலரிந் தற்று.

UTi yavarai uNarAmai vATiyavaLLi mutalarin taRRu

Theeban Ganesh

பொருள் / உரை

முருகா எளிய உரை

ஊடல் கொண்ட காதலியின் மனநிலையை உணர்ந்து அவளது ஊடலைத் தணிக்காமல் விலகி இருப்பது, நீரில்லாமல் முன்னரே வாடிக் கிடக்கும் பூங்கொடியை அடியோடு அறுத்து எறிவதைப் போன்ற கொடிய செயலாகும்!

• ஊடியவரை உணராமை = ஊடல் கொண்ட காதலியின் மனநிலையை உணர்ந்து அவளது ஊடலைத் தணிக்காமல் இருப்பது;• வாடிய வள்ளி = நீரில்லாமல் முன்னரே வாடிப் போயிருக்கும் கொடியை,• முதல் அரிந்தற்று = அதன் அடியிலேயே அறுத்து எறிவதைப் போன்றதாகும்!

மு.வரதராசன்

பிணங்கியவரை ஊடலுணர்த்தி அன்பு செய்யாமல் இருத்தல், முன்னமே வாடியுள்ள கொடியை அதன் அடியிலேயே அறுத்தல் போன்றது.

பரிமேலழகர்

(இதுவும் அது.) ஊடியவரை உணராமை - நும்மோடு ஊடிய பரத்தையரை ஊடலுணர்த்திக் கூடாதொழிதல்; வாடிய வள்ளி முதல் அரிந்தற்று - பண்டே நீர் பெறாது வாடிய கொடியை அடியிலே அறுத்தாற் போலும். ('நீர் பரத்தையரிடத்தில் ஆயவழி எம் புதல்வரைக் கண்டு ஆற்றியிருக்கற்பாலமாய யாம் நும்மோடு ஊடுதற்குரியமல்லம் அன்மையின், எம்மை உணர்த்தல் வேண்டா; உரியராய் ஊடிய பரத்தையரையே உணர்த்தல் வேண்டுவது; அதனால் ஆண்டுச் சென்மின்', என்பதாம்.)

சாலமன் பாப்பையா

தன்னுடன் ஊடல் கொண்ட மனைவிக்கு அவள் ஊடலைத் தெளிவுபடுத்தி, அவளுடன் கூடாமல் போவது, முன்பே நீர் இல்லாமல் வாடிய கொடியை அடியோடு அறுத்தது போலாம்.

Meaning in English

To use no kind conciliating art when lover grieves, Is cutting out the root of tender winding plant that droops

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout