அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்புலந்தாரைப் புல்லா விடல்.
alantArai allalnOy seytaRRAl tammaippulantAraip pullA viTal
Krishnamoorthy
பொருள் / உரை
முருகா எளிய உரை
தம்மிடம் அன்பு கொண்டு ஊடல் காட்டிய காதலியை சமாதானப்படுத்தித் தழுவாமல் விட்டுவிடுவது, ஏற்கனவே பிரிவுத் துன்பத்தால் வருந்தியவரை மேலும் கொடிய துன்பத்திற்கு ஆளாக்கி வாட்டுவதைப் போன்றதாகும்!
• தம்மைப் புலந்தாரை = தம்மிடம் அன்பு கொண்டு ஊடல் கொண்ட காதலியை;• புல்லா விடல் = ஊடலைத் தணித்துத் தழுவிக் கொள்ளாமல் விட்டுவிடுவது;• அலந்தாரை = முன்பே துன்பத்தால் வருந்திய ஒருவரை,• அல்லல் நோய் செய்தற்று = மேலும் கொடிய துன்பத்திற்கு ஆளாக்கி வாட்டுவதைப் போன்றதாகும்!
மு.வரதராசன்
தம்மோடு பிணங்கியவரை ஊடலுணர்த்தித் தழுவாமல் விடுதல், துன்பத்தால் வருந்தியவரை மேலும் துன்ப நோய் செய்து வரத்தினாற் போன்றது.
பரிமேலழகர்
(பரத்தையர் இடத்துநின்றும் வந்த தலைமகனொடு தலைமகள் புலந்து சொல்லியது.) தம்மைப் புலந்தாரைப் புல்லாவிடல் - தம்மைப் பெறாது புலந்த மகளிரைப் புலவி நீக்கிக்கலவாது ஆடவர் சேறல்; அலந்தாரை அல்லல் நோய் செய்தற்று - பண்டே துன்பமுற்று அழிந்தாரை அதன் மேலும் மிக்க துன்பத்தினைச் செய்தாற்போலும். ('பிறர்பால் சேறலின் நும்மைப் பெறாது புலந்தூடியிருக்கின்ற பரத்தையரைப் போய்ப் புலவி நீக்கிப் புல்லீராயின், அவராற்றார்' என்பதாம்.
சாலமன் பாப்பையா
தன்னுடன் ஊடல் கொண்ட மனைவியின் ஊடலை நீக்கிக் கூடாமல் போவது, ஏற்கனவே துன்பப்பட்டவர்களுக்கு மேலும் அதிகத் துன்பத்தைக் கொடுத்தது போலாம்.
Meaning in English
'Tis heaping griefs on those whose hearts are grieved; To leave the grieving one without a fond embrace





