Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1300

இன்பத்துப்பால்கற்பியல்130. நெஞ்சொடுபுலத்தல்

தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடையநெஞ்சம் தமரல் வழி.

tanjsam tamarallar EtilAr tAmuTaiyanenjsam tamaral vazhi

Anusooya Vasudevan

பொருள் / உரை

முருகா எளிய உரை

தமக்கு உரிமையான தன் சொந்த நெஞ்சமே தமக்கு உறவாக நிற்காத போது, அயலாராகிய காதலி நம்மோடு உறவாகாமல் பிணங்கி நிற்பது இயல்பானதும் எளிதானதும் ஆகும்!

• தாம் உடைய நெஞ்சம் தமர் அல் வழி = தமக்கு உரிமையான தன் சொந்த நெஞ்சமே தமக்கு உறவாக இல்லாத போது;• ஏதிலார் தமர் அல்லர் தஞ்சம் = அயலாராகிய காதலி நம்மோடு உறவாகாமல் ஊடி நிற்பது மிகவும் எளிதான ஒன்றே ஆகும்!

மு.வரதராசன்

ஒருவர்க்கு தாம் உரிமையாகப் பெற்ற நெஞ்சமே உறவாகாதபோது அயலார் உறவில்லாதவராக இருப்பது எளிதேயாகும்.

பரிமேலழகர்

(இதுவும் அது.) தாம் உடைய நெஞ்சம் தமர் அல்வழி - தாம் உரித்தாக உடைய நெஞ்சம் ஒருவர்க்குத் தமர் அல்லாவழி; ஏதிலார் தமர் அல்லர் தஞ்சம் - அயலார் தமர் அல்லராதல் சொல்ல வேண்டுமோ? ('பிறளொருத்தியைக் காதலி என்று கருதி என் நெஞ்சே என்னை வருத்தாநின்ற பின் அப்பிறள் புலக்கின்றது எளிது', என்பதாம்.)

சாலமன் பாப்பையா

நமக்குரிய நெஞ்சமே நம்முடன் உறவாக இல்லாத போது, மற்றவர் உறவில்லாதவராக இருத்தல் என்பது எளிதேயாகும்.

Meaning in English

A trifle is unfriendliness by aliens shown, When our own heart itself is not our own

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout