Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1299

இன்பத்துப்பால்கற்பியல்130. நெஞ்சொடுபுலத்தல்

துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடையநெஞ்சந் துணையல் வழி.

tunpattiR kiyArE tuNaiyAvAr tAmuTaiyanenjsan tuNaiyal vazhi

Radhika Venugopal

பொருள் / உரை

முருகா எளிய உரை

ஒருவர்க்குத் தாம் உரிமையாகப் பெற்றுள்ள தன் நெஞ்சமே துணையாக நிற்காத போது, அவர் அடையும் காதல் துன்பத்தைத் தீர்ப்பதற்கு வேறு யார் துணையாக வந்து உதவ முடியும்!

• தாம் உடைய நெஞ்சம் துணை அல் வழி = ஒருவர்க்குத் தாம் உரிமையாகப் பெற்ற தன் நெஞ்சமே துணையாக இல்லாத போது;• துன்பத்திற்கு = அவர் அடையும் துன்பத்தைத் தீர்ப்பதற்கு,• துணை ஆவார் யாரே = வேறு துணையாக வரக்கூடியவர் யார்? (ஒருவரும் இல்லை).

மு.வரதராசன்

ஒருவர்க்குத் துன்பம் வந்தபோது, தாம் உரிமையாகப் பெற்றுள்ள நெஞ்சமே துணையாகா விட்டால், வேறு யார் துணையாவார்?

பரிமேலழகர்

(உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் சொல்லியது.) துன்பத்திற்கு - ஒருவர்க்குத் துன்பம் வந்துழி, அது நீக்குதற்கு; தாம் உடைய நெஞ்சம் துணை அல் வழி - தாம் உரித்தாகப் பெற்ற தம்முடைய நெஞ்சம் துணையாகாவழி; துணையாவார் யாரே - வேறு துணையாவார் ஒருவரும் இல்லை (ஈண்டுத் துன்பமாவது - ஊடலுணர்ப்புவயின் வாராமை. அதற்கு நெஞ்சம் துணையாகாமையாவது, அவளை அன்பிலள் என்றொழியாது கூடற்கண்ணே விதும்பல். 'ஒரு துணையும் இன்மையின், இஃது உற்று விடுதலே உள்ளது', என்பதாம்.)

சாலமன் பாப்பையா

ஒருவரது துன்பத்திற்குத் தாம் உரிமையாகப் பெற்றிருக்கும் தம் நெஞ்சமே துணையாகாதபோது, வேறு யார் துணையாவார்?

Meaning in English

And who will aid me in my hour of grief, If my own heart comes not to my relief

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout