Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1298

இன்பத்துப்பால்கற்பியல்130. நெஞ்சொடுபுலத்தல்

எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.

eLLin iLivAmen ReNNi avartiRamuLLum uyirkkAtal nenjsu

S. Sulakshana

பொருள் / உரை

முருகா எளிய உரை

என் உயிரைக் காப்பாற்ற விரும்பும் என் காதல் நெஞ்சமானது, 'நாமும் காதலரை இகழ்ந்து பேசினால் நமக்குத்தான் இழிவு உண்டாகும்' என்று கருதி, அவருடைய நற்குணங்களையும் வரவையுமே இடைவிடாமல் நினைத்துக் கொண்டிருக்கின்றது!

• உயிர்க் காதல் நெஞ்சு = என் உயிரைக் காப்பாற்ற விரும்பும் என் காதல் நெஞ்சமானது;• எள்ளின் இளிவு ஆம் என்று எண்ணி = 'நாமும் காதலரை இகழ்ந்தால் நமக்குத்தான் இழிவு உண்டாகும்' என்று கருதி,• அவர் திறம் உள்ளும் = அவருடைய நற்பண்புகளையும் வரவையுமே இடைவிடாமல் நினைத்துக் கொண்டிருக்கின்றது!

மு.வரதராசன்

உயரின் மேல் காதல் கொண்ட என் நெஞ்சம், பிரிந்த காதலரை இகழ்ந்தால் இழிவாகும் என்று எண்ணி அவருடைய உயர்ந்த பண்புகளையே நினைக்கின்றது.

பரிமேலழகர்

(இதுவும் அது.) உயிர்க் காதல் நெஞ்சு - உயிர்மேல் காதலையுடைய என் நெஞ்சு; எள்ளின் இளிவு ஆம் என்று எண்ணி -நம்மை எள்ளிச் சென்றார் என்று நாமும் எள்ளுவேமாயின் பின் நமக்கு இளிவாம் என்று கருதி; அவர் திறம் உள்ளும் - அவர் திறத்தினையே நினையாநின்றது. (எள்ளுதல் - வாயில் மறுத்தல். இளிவு - வழிபடாமையானும், பிரிவாற்றாமையானும் , நாணும் நிறையும் முதலிய இழத்தலானும் உளதாவது. திறம் - வாயில் நேர்தலும் வருதலும் கூடலும் முதலாயின. இளிவிற்கு அஞ்சுதலானும் இறந்துபட மாட்டாமையானும் கூடக் கருதாநின்றது என்பதாம்.)

சாலமன் பாப்பையா

உயிர்மேல் காதலை உடைய என் நெஞ்சு, நாமும் அவரை இகழ்ந்தால் பிறகு நமக்கும் இழிவுவரும் என்று எண்ணி, அவர் வரவையும் கலவியையுமே நினைத்து நின்றது.

Meaning in English

If I contemn him, then disgrace awaits me evermore; My soul that seeks to live his virtues numbers o'er

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout