Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1297

இன்பத்துப்பால்கற்பியல்130. நெஞ்சொடுபுலத்தல்

நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்மாணா மடநெஞ்சிற் பட்டு.

nANum maRantEn avarmaRak kallAvenmANA maTanenjsiR paTTu

Abisheka Gowthaman

பொருள் / உரை

முருகா எளிய உரை

என்னை மறந்த காதலரைத் தான் மறக்க முடியாமல் தவிக்கும் என் அறிவற்ற மட நெஞ்சத்தோடு சேர்ந்து, பெண்களுக்கு உயிரை விடவும் சிறந்த நாணம் என்ற குணத்தையும் நான் முற்றிலுமாக மறந்து விட்டேன்!

• அவர் மறக்கல்லா = என்னை மறந்த காதலரைத் தான் மறக்க முடியாமல் தவிக்கும்,• என் மாணா மடநெஞ்சில் பட்டு = என் பெருமையற்ற மட நெஞ்சத்தோடு சேர்ந்து;• நாணும் மறந்தேன் = பெண்களுக்கு உயிரினும் சிறந்த நாணத்தையும் நான் மறந்து விட்டேன்!

மு.வரதராசன்

காதலனை மறக்க முடியாத என்னுடைய சிறப்பில்லாத மட நெஞ்சினோடு சேர்ந்து, மறக்கத் தகாததாகிய நாணத்தையும் மறந்து விடடேன்.

பரிமேலழகர்

(இதுவும் அது.) அவர் மறக்கல்லா என் மாணா மடநெஞ்சிற்பட்டு - தன்னை மறந்த காதலரைத் தான் மறக்கமாட்டாத என் மாட்சிமையில்லாத மடநெஞ்சுடனே கூடி; நாணும் மறந்தேன் - என் உயிரினும் சிறந்த நாண் தன்னையும் மறந்துவிட்டேன். (மாணாமை - ஒரு நிலையில் நில்லாமை. மடமை - கண்டவழி நினைந்து காணாதவழி மறக்குந் தவற்றைக் காணாவழி நினைந்து கண்டவழி மறத்தல். நாண் - எஞ்ஞான்றும் கூடியொழுகினும் அஞ்ஞான்று கண்டார் போன்று ஒடுங்குதல், 'கண்ட பொழுதே புணர்ச்சி விதும்பலின், அதனையும் மறந்தேன்', என்றாள்.)

சாலமன் பாப்பையா

தன்னை மறந்த காதலரைத் தான் மறக்க முடியாத, என் நிலையில்லாத மடநெஞ்சோடு கூடி, நான் நாணத்தையும் மறந்துவிட்டேன்.

Meaning in English

Fall'n 'neath the sway of this ignoble foolish heart, Which will not him forget, I have forgotten shame

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout