Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1296

இன்பத்துப்பால்கற்பியல்130. நெஞ்சொடுபுலத்தல்

தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்தினிய இருந்ததென் நெஞ்சு.

taniyE iruntu ninaittakkAl ennaittiniya iruntaten nenjsu

Shradha Ganesh

பொருள் / உரை

முருகா எளிய உரை

காதலரைப் பிரிந்து தனியாக இருந்து அவருடைய பிரிவுத் தவறுகளை நான் நினைத்துப் பார்க்கும் போதெல்லாம், என்னுடைய நெஞ்சமானது என்னையே தின்று விடுவது போலக் கொடிய வேதனையை எனக்குத் தந்தது!

• தனியே இருந்து = காதலரைப் பிரிந்து தனியாக இருந்து,• நினைத்தக்கால் = அவருடைய பிரிவுத் தவறுகளை நான் நினைத்துப் பார்க்கும் போது;• என் நெஞ்சு = என்னுடைய நெஞ்சமானது,• என்னைத் தினிய இருந்தது = என்னை அப்படியே தின்று விடுவது போல் அளவற்ற துன்பத்தைத் தந்தது!

மு.வரதராசன்

காதலரைப் பிரிந்து தனியே இருந்து அவருடைய தவறுகளை நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போல் துன்பம் செய்வதாக இருந்தது.

பரிமேலழகர்

(இதுவும் அது.) என் நெஞ்சு இருந்தது - என் நெஞ்சு ஈண்டு இருந்தது; தனியே இருந்து நினைத்தக்கால் - காதலரைப் பிரிந்திருந்து அவர் கொடுமைகளை யான் தன்னொடு நினைத்தக்கால்; என்னைத் தினிய - அவ் அளவறிந்து என்னைத்தின்பது போன்று துன்பம் செய்தற்கே. ('என்மாட்டிருந்தது அன்று அவர் கொடுமைகளை உட்கொண்டு எனக்கு ஆற்றாமை செய்தற்கே, இன்று அவை நோக்கி அவரொடு புலத்தற்கன்று' என்பதாம்.)

சாலமன் பாப்பையா

காதலர் பிரிவைத் தனியே இருந்து நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போலக் கொடுமையாக இருந்தது.

Meaning in English

My heart consumes me when I ponder lone, And all my lover's cruelty bemoan

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout