உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.
uRAa tavarkkaNTa kaNNum avaraisseRAarenas sERiyen nenjsu
Priya Hemesh
பொருள் / உரை
முருகா எளிய உரை
என் நெஞ்சமே! நம்மிடம் இப்போது அன்பு காட்டாமல் விலகியிருக்கும் காதலரின் நிலையை உணர்ந்திருந்தும், 'நாம் சென்றால் அவர் நம் மீது கோபம் கொள்ள மாட்டார்' என்று நம்பி அவரிடமே நீ ஓடிச் செல்கின்றாயே!
• என் நெஞ்சு = என் நெஞ்சமே!• உறாதவர் கண்ட கண்ணும் = நம்மிடம் அன்பு இல்லாதவராகிய காதலரை நேரில் கண்டபோதும்;• செறார் என = 'நாம் போனால் அவர் கோபப்பட மாட்டார்' என்று எண்ணி,• அவரைச் சேறி = அவரிடமே நீ விரைந்து செல்கின்றாயே!
மு.வரதராசன்
என் நெஞசே! நம்மேல் அன்பு கொள்ளாத காதலரைக் கண்டபோதும், அவர் வெறுக்கமாட்டார் என்று எண்ணி அவரிடம் செல்கின்றாயே!
பரிமேலழகர்
(இதுவும் அது.) என் நெஞ்சு - என் நெஞ்சே; உறாதவர்க்கண்ட கண்ணும் - மேலும் நம்மாட்டு அன்புடையராகாதவரை உள்ளவாறு அறிந்த இடத்தும்; செறார் என அவரைச் சேறி - நாம் சென்றால் வெகுளார் என்பது பற்றி நீ அவர் மாட்டுச் செல்லாநின்றாய், இப்பெற்றியது மேலும் ஓர் அறியாமையுண்டோ?('அவரை' என்பது வேற்றுமை மயக்கம் 'பழங்கண்ணோட்டம்பற்றி வெகுளார் என்பது கந்தாகச் சென்றாய், நீ கருதியது முடியுமோ'? என்பதாம்.)
சாலமன் பாப்பையா
என் நெஞ்சே! என்மீது அன்பு இல்லாதவரை உள்ளபடியே நீ அறிந்திருந்தும் நாம் போனால் அவர் கோபப்படமாட்டார் என்று எண்ணி நீ அவரிடமே செல்லுகின்றாய்!
Meaning in English
'Tis plain, my heart, that he 's estranged from thee; Why go to him as though he were not enemy





