Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1290

இன்பத்துப்பால்கற்பியல்129. புணர்ச்சிவிதும்பல்

கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்என்னினும் தான்விதுப் புற்று.

kaNNin tunittE kalangkinAL pullutalenninum tAnvitup puRRu

Kaushik Sridharan

பொருள் / உரை

முருகா எளிய உரை

சொல் பொருள் (பதவுரை):• கண்ணின் துனித்தே = என் காதலி தன் கண்களின் பார்வையால் மட்டுமே என்னிடம் மெல்லிய ஊடலைக் காட்டினாள்;• புல்லுதல் என்னினும் தான் விதுப்புற்று = ஆனால் என்னை விடவும் தானே விரைந்து தழுவ வேண்டும் என்ற தீவிர ஆசையினால்,• கலங்கினாள் = அந்த ஊடலை உடனே மறந்துவிட்டு என்னோடு கூடிவிட்டாள்!எளிய விளக்கம்:என் காதலி தன் கண்களின் பார்வையால் மட்டுமே என்னிடம் மெல்லிய ஊடலைக் காட்டினாள்; ஆனால் என்னை விடவும் தானே விரைந்து தழுவ வேண்டும் என்ற தீவிர ஆசையினால், அந்த ஊடலை உடனே மறந்துவிட்டு என்னோடு கூடி மகிழ்ந்தாள்!

மு.வரதராசன்

கண் பார்வையின் அளவில் பிணங்கி, என்னை விடத் தான் விரைந்து தழுவுதலை விரும்பி, ( பிணங்கிய நிலையையும் மறந்து) கலந்து விட்டாள்.

பரிமேலழகர்

(இதுவும் அது.) கண்ணின் துனித்தே - காதலி முன்னொரு ஞான்று புல்லல் விதுப்பினாற் சென்ற என்னொடு தன் கண் மாத்திரத்தான் ஊடி; புல்லுதல் என்னினும் தான் விதுப்பு உற்றுக் கலங்கினாள் - புல்லுதலை என்னினும் தான் விதும்பலால் அது தன்னையும் அப்பொழுதே மறந்து கூடிவிட்டாள்; அதனால் யான் இத்தன்மையேனாகவும் விதுப்பின்றி ஊடி நிற்கின்ற இவள் அவளல்லள். (கண் மாத்திரத்தான் ஊடல் - சொல் நிகழ்ச்சியின்றி அது சிவந்த துணையே யாதல். 'அவளாயின் இங்ஙனம் ஊடற்கண் நீடாள்' என்பது பயன்.)

சாலமன் பாப்பையா

தன் கண் அளவில் என்னோடு ஊடி, என்னைத் தழுவுவதை என்னைக் காட்டிலும் அவள் விரைந்து விரும்புவதால், ஊடலை மறந்து கூடிவிட்டாள்

Meaning in English

Her eye, as I drew nigh one day, with anger shone: By love o'erpowered, her tenderness surpassed my own

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout