இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்கள்ளற்றே கள்வநின் மார்பு.
iLittakka innA seyinum kaLittArkkukkaLLaRRE kaLvanin mArpu
Ranjana
பொருள் / உரை
முருகா எளிய உரை
நெஞ்சைக் கவர்ந்த கள்வனே! இழிவைத் தரும் துன்பங்களை உண்டாக்கினாலும் குடித்தவர்க்கு மேலும் மேலும் சுவை தரும் கள்ளைப் போல, பிரிவுத் துன்பத்தைத் தந்தாலும் எங்களால் மேன்மேலும் விரும்பப்படுவதாக இருக்கின்றது உன்னுடைய மார்பு!
• கள்வ = நெஞ்சைக் கவர்ந்த கள்வனே!• இளித்தக்க இன்னா செயினும் = தனக்கு நாணமின்மை போன்ற இழிவைத் தரும் துன்பங்களை உண்டாக்கினாலும்;• களித்தார்க்கு கள் அற்றே = கள்ளுண்டு மயங்கியவர்களுக்கு மேலும் மேலும் சுவை தரும் கள்ளைப் போன்றதே,• நின் மார்பு = எங்களை மயக்கும் உன்னுடைய அழகிய மார்பு!
மு.வரதராசன்
கள்வ! இழிவு வரத்தக்க துன்பங்களைச் செய்தாலும் கள்ளுண்டு களித்தவர்க்கு மேன்மேலும் விருப்பம் தரும் கள்ளைப் போன்றது உன் மார்பு.
பரிமேலழகர்
(தலைமகள் புணர்ச்சி விதுப்பு அறிந்த தோழி, தலைமகற்குச் சொல்லியது.) கள்வ - வஞ்சக; களித்தார்க்கு இளித்தக்க இன்னா செயினும் கள் அற்றே - தன்னை உண்டு களித்தார்க்கு இளிவரத்தக்க இன்னாதவற்றைச் செயினும் அவரால் மேன்மேல் விரும்பப்படுவதாய கள்ளுப் போலும்; நின் மார்பு - எங்கட்கு நின் மார்பு. (அவ்வின்னாதன நாணின்மை, நிறையின்மை ஒழுக்கமின்மை, உணர்வின்மை என்றிவை முதலாயின. 'எங்கட்கு நாணின்மை முதலியவற்றைச் செய்யுமாயினும், எங்களால் மேன்மேல் விரும்பப் படா நின்றது' என்பதாம். 'கள்வ' என்றதும், அது நோக்கி.)
சாலமன் பாப்பையா
வஞ்சகரே! தன்னை உண்டு மகிழ்ந்தவர்க்கு எளிமை வரத்தக்க தீமையைச் செய்தாலும், அவரால் மேலும் மேலும் விரும்பப்படும் கள்ளைப் போன்றது எனக்கு உன் மார்பு. இத்தனையும் அவளுக்கு மட்டுந்தானா? அவன் எதுவுமே நினைக்கவில்லையா? அவள் நினைவுகளை அவளின் பார்வையிலேயே படித்துவிட்டான். அவளைத் தேற்றுகிறான்.
Meaning in English
Though shameful ill it works, dear is the palm-tree wine To drunkards; traitor, so to me that breast of thine





