Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1287

இன்பத்துப்பால்கற்பியல்129. புணர்ச்சிவிதும்பல்

உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்பொய்த்தல் அறிந்தென் புலந்து.

uyttal aRintu punalpAy pavarEpOlpoyttal aRinten pulantu

Pavithra Ravisankar

பொருள் / உரை

முருகா எளிய உரை

ஆற்று வெள்ளம் தன்னை இழுத்துக்கொண்டு சென்றுவிடும் என்று தெரிந்தே அதில் பாய்ந்து நீந்துபவரைப் போல, காதலரைக் கண்டவுடன் என் ஊடல் அழியும் என்று தெரிந்திருந்தும் அவரிடம் வீணாக ஊடல் கொண்டு என்ன பயன்!

• உய்த்தல் அறிந்து புனல் பாய்பவரே போல் = வெள்ளம் தன்னை இழுத்துக்கொண்டு சென்றுவிடும் என்று தெரிந்தே அதில் பாய்ந்து நீந்துபவரைப் போல;• பொய்த்தல் அறிந்து = காதலரைக் கண்டவுடன் என் ஊடல் நிற்காமல் அழிந்துவிடும் என்று தெரிந்திருந்தும்,• புலந்து என் = அவரிடம் வீணாக ஊடல் கொண்டு என்ன பயன்? (ஒரு பயனும் இல்லை).

மு.வரதராசன்

வெள்ளம் இழுத்துச் செல்வதை அறிந்திருந்தும் ஓட் நீரில் பாய்கின்றவரைப் போல், பயன்படாமை அறிந்திருந்திருந்தும் ஊடல் கொள்வதால் பயன் ன்னெ?

பரிமேலழகர்

(இதுவும் அது.) உய்த்தல் அறிந்து புனல் பாய்பவரே போல - தம்மை ஈர்த்துக் கொண்டு போதல் அறிந்துவைத்து ஒழுகுகின்ற புனலுட் பாய்வார் செயல் போல; பொய்த்தல் அறிந்து புலந்து என்? - புலவி முடிவு போகாமை அறிந்து வைத்துக் கொண்கனோடு புலந்து பெறுவது என்? ('பாய்பவர்' என்பது ஆகுபெயர். பொய்த்தல் - புரைபடுதல், புலந்தாலும் பயனில்லை என்பதாம். 'பொய்த்தல் அறிந்தேன்' என்பது பாடமாயின், 'உய்த்தலறிய ஓடும் நீருட் பாய்வார் முடிவறியப் பண்டொருகாற் புலந்து முடியாமை அறிந்தேன், இனி அது செயற்பாற்றன்று என' உரைக்க.)

சாலமன் பாப்பையா

தன்னை இழுத்துக் கொண்டு போகும் என்று தெரிந்தும், ஓடும் வெள்ளத்துள் பாய்பவர் செயலைப் போல, என் சினம் பலன் அளிக்காது என்று தெரிந்தும் அவருடன் ஊடல் கொண்டு ஆவது என்ன?

Meaning in English

As those of rescue sure, who plunge into the stream, So did I anger feign, though it must falsehood seem

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout