Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1286

இன்பத்துப்பால்கற்பியல்129. புணர்ச்சிவிதும்பல்

காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்காணேன் தவறல் லவை.

kANungkAl kANEn tavaRAya kANAkkAlkANEn tavaRal lavai

Umadevi Nageswararao

பொருள் / உரை

முருகா எளிய உரை

சொல் பொருள் (பதவுரை):• காணுங்கால் தவறாய காணேன் = காதலரை நேரில் காணும் போது அவர் செய்த தவறுகள் எதையுமே நான் காண்பதில்லை;• காணாக்கால் = அவரைக் காணாத பிரிவு வேளையிலோ,• தவறு அல்லவை காணேன் = அவர் செய்த குற்றங்களைத் தவிர வேறு எதையுமே நினைத்துப் பார்க்க முடிவதில்லை!எளிய விளக்கம்:காதலரை நேரில் காணும் போது அவர் செய்த தவறுகள் எதையுமே என் நெஞ்சம் காண்பதில்லை; ஆனால் அவரைக் காணாத பிரிவு வேளையிலோ, அவர் செய்த குற்றங்களைத் தவிர வேறு எந்த நன்மையையும் என்னால் நினைக்க முடிவதில்லை!

மு.வரதராசன்

காதலரைக் யான் காணும்போது ( அவருடைய செயல்களில்) தவறானவற்றைக் காண்பதில்லை; அவரைக் காணாதபோது தவறு அல்லாத நன்மைகளைக் காண்பதில்லை.

பரிமேலழகர்

(இதுவும் அது.) காணுங்கால் தவறாய காணேன் - கொண்கனை யான் காணும் பொழுது அவன் தவறாயவற்றைக் காண்கின்றிலேன்; காணாக்கால் தவறல்லவை காணேன் - காணாத பொழுது அவையேயல்லாது பிறவற்றைக் காண்கின்றிலேன். (செயப்படுபொருள் அதிகாரத்தான் வந்தது. 'முன்பு நான் நின்னொடு சொல்லிய தவறுகள் இதுபொழுது காணாமையின் புலந்திலேன்', என்பதாம்.)

சாலமன் பாப்பையா

கணவனை நான் காணும்போது அவரது தவறுகளைக் காணேன்; காணாதபோதோ, தவறுகளைத் தவிரப் பிறவற்றைக் காணேன்.

Meaning in English

When him I see, to all his faults I 'm blind; But when I see him not, nothing but faults I find

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout