Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1285

இன்பத்துப்பால்கற்பியல்129. புணர்ச்சிவிதும்பல்

எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்பழிகாணேன் கண்ட இடத்து.

ezhutungkAl kOlkANAk kaNNEpOl koNkaNpazhikANEn kaNTa iTattu

Saindhavi

பொருள் / உரை

முருகா எளிய உரை

கண்களில் மை தீட்டும் போது அந்த மைக்கோலைத் தன் அருகில் காண முடியாத கண்களைப் போல, என் காதலனை நேரில் காணும் போது அவன் செய்த பிரிவுத் தவறுகள் எதையுமே என் கண்களால் காண முடிவதில்லை!

• எழுதுங்கால் கோல் காணாக் கண்ணே போல் = கண்களில் மை தீட்டும் போது அந்த மைக்கோலைத் தன் அருகில் காண முடியாத கண்களைப் போல;• கொண்கன் கண்ட இடத்து = என் காதலனை நேரில் காணும் போது,• பழி காணேன் = அவன் செய்த தவறுகள் எதையுமே என்னால் காண முடிவதில்லை!

மு.வரதராசன்

மை தீட்டும் நேரத்தில் தீட்டு் கோலைக் காணாத கண்களைப் போல், காதலனைக் கண்டபோது மட்டும் அவனுடைய குற்றத்தை நினைக்காமல் மறந்து விடுகின்றேன்.

பரிமேலழகர்

(இதுவும் அது.) எழுதுங்கால் கோல் காணாக் கண்ணேபோல் - முன்னெல்லாங் கண்டிருந்தும் எழுதுங்காலத்து அஞ்சனக் கோலின் இயல்பு காணமாட்டாத கண்ணேபோல; கொண்கன் பழி கண்டவிடத்துக் காணேன் - கொண்கனது தவறு காணாதவிடத் தெல்லாம் கண்டிருந்து. அவனைக் கண்டவிடத்துக் காணமாட்டேன். (கோல்: ஆகுபெயர். இயல்பு: கருமை. 'என் இயல்பு இதுவாகலின் மேலும் அது தப்ப முடியாது' என்பதாம்.)

சாலமன் பாப்பையா

முன்பு பார்த்திருந்தும் மை தீட்டும்போது அஞ்சனக் கோலைக் காணாத கண்களைப் போல, கணவனின் தவற்றை அவர் இல்லாதபோது எண்ணி இருந்தும், நேரில் அவரைக் கண்ட போது காணேன்.

Meaning in English

The eye sees not the rod that paints it; nor can I See any fault, when I behold my husband nigh

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout