Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1284

இன்பத்துப்பால்கற்பியல்129. புணர்ச்சிவிதும்பல்

ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்துகூடற்கண் சென்றதுஎன் னெஞ்சு.

UTaRkaN senREnman tOzhi atumaRantukUTaRkaN senRaten nenjsu

Lakshmi Pradeep

பொருள் / உரை

முருகா எளிய உரை

சொல் பொருள் (பதவுரை):• தோழி = என் தோழியே!• ஊடற்கண் சென்றேன் மன் = 'காதலர் வந்ததும் அவரிடம் சினந்து ஊட வேண்டும்' என்றுதான் நான் சென்றேன்;• அது மறந்து = ஆனால் அவரைக் கண்டவுடன் அந்த ஊடலை மறந்துவிட்டு,• என் நெஞ்சு கூடற்கண் சென்றது = என் நெஞ்சமானது அவரோடு கூடித் தழுவுவதிலேயே நாட்டம் கொண்டது!எளிய விளக்கம்:தோழியே! காதலர் வந்ததும் அவரிடம் பிணங்கி ஊடல் கொள்ள வேண்டும் என்றுதான் நான் எண்ணிச் சென்றேன்; ஆனால் அவரைக் கண்ட அடுத்த கணமே அந்த ஊடலை மறந்துவிட்டு, என் மனம் அவரோடு கூடித் தழுவுவதிலேயே தீவிரமானது!

மு.வரதராசன்

தோழி! யான் அவரோடு ஊடுவதற்காகச் சென்றேன்; ஆனால், என்னுடைய நெஞ்சம் அந்த நோக்கத்தை மறந்து அவரோடு கூடுவதற்காகச் சென்றது.

பரிமேலழகர்

(இதுவும் அது.) தோழி - தோழி; ஊடற்கண் சென்றேன் - காதலரைக் காணாமுன் அவர் செய்த தவற்றைத் தன்னோடு நினைந்து யான் அவரோடு ஊடுதற்கண்ணே சென்றேன்; என் நெஞ்சு அது மறந்து கூடற்கண் சென்றது - கண்டபின் என் நெஞ்சு அதனை மறந்து கூடுதற்கண்ணே சென்றது. (சேறல் நிகழ்தல் நினைத்த நெஞ்சிற்கும் ஒத்தலின், 'அது மறந்து' என்றாள். அச்செலவாற் பயன்என் என்பதுபட நின்றமையின் 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. 'அவ்வெல்லையிலே நெஞ்சு அறைபோகலான், அது முடிந்ததில்லை' என்பதாம்.)

சாலமன் பாப்பையா

தோழி! காதலரைக் காண்டுபதற்கு முன், அவர் செய்த தவற்றை எண்ணி ஊட நினைத்தேன்; அவரைப் பார்த்த பிறகு, அதை மறந்து, அவருடன் கூடவே என் மனம் சென்றது.

Meaning in English

My friend, I went prepared to show a cool disdain; My heart, forgetting all, could not its love restrain

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout