Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1283

இன்பத்துப்பால்கற்பியல்129. புணர்ச்சிவிதும்பல்

பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்காணா தமையல கண்.

pENAtu peTpavE seyyinum koNkanaikkANA tamaiyala kaN

Jananie

பொருள் / உரை

முருகா எளிய உரை

என் காதலர் என்னை அன்போடு போற்றாமல் தனக்கு விருப்பமான பயணத்தையே மேற்கொண்டு சென்றாலும், அவரை நேரில் காணாமல் என் கண்கள் ஒருபோதும் அமைதி அடைவதில்லை!

• பேணாது = என்னை அன்போடு போற்றாமல்,• பெட்பவே செய்யினும் = தனக்கு விருப்பமான செயல்களையே செய்துவிட்டுச் சென்றாலும்;• கொண்கனை = என் காதலனை,• கண் காணாது அமையல = என் கண்கள் நேரில் காணாமல் ஒருபோதும் அமைதி அடைவதில்லை!

மு.வரதராசன்

என்னை விரும்பாமல் புறக்கணித்துத் தனக்கு விருப்பமானவற்றையே செய்து ஒழுகினாலும், என்னுடைய கண்கள் காதலனைக் காணாமல் பொருந்தவில்லை.

பரிமேலழகர்

(இதுவும் அது.) பேணாது பெட்பவே செய்யினும் - நம்மை அவமதித்துத் தான் செய்ய வேண்டியனவே செய்யுமாயினும்; கொண்களைக் கண் காணாது அமையல - கொண்கனை என் கண்கள் காணாது அமைகின்றன இல்லை. (தன் விதுப்புக் கண்கள்மேல் ஏற்றப்பட்டது. 'அத்தன்மையேன் அவனோடு புலக்குமாறு என்னை' ? என்பதாம்.)

சாலமன் பாப்பையா

என்னை அவமதித்து அவர் தம் விருப்பப்படியே செய்தாலும் என் கண்கள் அவரைக் காணாமல் இருப்பதில்லை.

Meaning in English

Although his will his only law, he lightly value me, My heart knows no repose unless my lord I see

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout