Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1281

இன்பத்துப்பால்கற்பியல்129. புணர்ச்சிவிதும்பல்

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்கள்ளுக்கில் காமத்திற் குண்டு.

uLLak kaLittalum kANa makizhtalumkaLLukkil kAmattiR kuNTu

Sridhar Sena

பொருள் / உரை

முருகா எளிய உரை

காதலரை நினைத்த மாத்திரத்திலேயே நெஞ்சம் பூரிப்பதும், அவரைக் கண்டவுடனேயே பேரானந்தம் அடைவதும் ஆகிய இந்த இரண்டு இன்பங்களும் குடித்தால் மட்டுமே மயக்கம் தரும் கள்ளுக்கு இல்லை; உண்மையான காதலுக்கு மட்டுமே உண்டு!

• உள்ளக் களித்தலும் = காதலரை நினைத்த அளவிலேயே நெஞ்சம் பூரித்து இன்புறுதலும்,• காண மகிழ்தலும் = அவரைக் கண்ட அளவிலேயே பேரானந்தம் அடைதலும்;• கள்ளுக்கு இல் = குடித்தால் மட்டுமே போதை தரும் கள்ளுக்கு இல்லை,• காமத்திற்கு உண்டு = தூய காதலுக்கு மட்டுமே உண்டு!

மு.வரதராசன்

நினைத்த அளவிலே களிப்படைதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி அடைதலும் ஆகிய இந்த இருவகை தன்மையும் கள்ளுக்கு இல்‌லை; காமத்திற்கு உண்டு

பரிமேலழகர்

(பிரிதற்குறிப்பினன் ஆகியானொடு நீ புலவாமைக்குக் காரணம் யாது? என, நகையாடிய தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) உள்ளக்களித்தலும் - நினைந்த துணையானே களிப்பெய்தலும்; காண மகிழ்தலும் - கண்ட துணையானே மகிழ்வெய்தலும்; கள்ளுக்கு இல் காமத்திற்கு உண்டு - கள்ளுண்டார்க்கு இல்லை, காமம் உடையார்க்கு உண்டு.(களித்தல் - உணர்வழியாதது. மகிழ்தல் - அஃதழிந்தது, இவ்விரண்டும் உண்டுழியல்லது இன்மையின் 'கள்ளுக்கு இல்' என்றாள். 'உண்டு' என்பது இறுதி விளக்கு. 'அப்பெற்றித்தாய காமம் உடையான் புலத்தல் யாண்டையது' என்பதாம்.)

சாலமன் பாப்பையா

நினைத்த அளவிலே உணர்வு அழியாமல் உள்ளம் கிளர்தலும், பார்த்த அளவிலே உணர்வு அழிய உள்ளம் கிளர்தலும் கள் உண்பவர்க்கு இல்லை; காதல் வசப்பட்டவர்க்கே உண்டு.

Meaning in English

Gladness at the thought, rejoicing at the sight, Not palm-tree wine, but love, yields such delight

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout