பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்காமநோய் சொல்லி இரவு.
peNNinAR peNmai uTaittenpa kaNNinAlkAmanOy solli iravu
Abby V
பொருள் / உரை
முருகா எளிய உரை
தன் காதலின் பிரிவாற்றாமையை வாயால் சொல்லாமல் கண்களாலேயே உணர்த்தித் தன்னோடு இருக்குமாறு வேண்டுதல், பெண்மையின் இயல்பான மென்மைக்கு மேலும் ஒரு பேரழகையும் நளினத்தையும் தருவதாகும் என்று அறிஞர் கூறுவர்!
• கண்ணினால் காமநோய் சொல்லி = தன் காதலின் பிரிவாற்றாமையை வாயால் சொல்லாமல் கண்களாலேயே உணர்த்தி,• இரவு = பிரியாமல் இருக்குமாறு வேண்டுதல்;• பெண்ணினால் பெண்மை உடைத்து என்ப = பெண்மையின் இயல்பான அழகிற்கு மேலும் பேரழகையும் நளினத்தையும் தருவதாகும் என்று அறிஞர் கூறுவர்!
மு.வரதராசன்
கண்ணினால் காமநோயைத் தெரிவித்துப் பிரியாமல் இருக்குமாறு இரத்தல், பெண் தன்மைக்கு மேலும் பெண் தன்மை உடையது என்று கூறுவர்.
பரிமேலழகர்
(தலைமகன் பிரியாமைக் குறிப்பினைத் தோழிக்கு அறிவுறுத்தது.) காமநோய் கண்ணினால் சொல்லி இரவு - மகளிர் தம் காம நோயினைத் தோழியர்க்கும் வாயாற்சொல்லாது கண்ணினாற் சொல்லி அது தீர்க்கவேண்டும் என்று அவரை இரவாது உடன்போதல் குறித்துத் தம் அடியினை இரத்தல்; பெண்ணினால் பெண்மை உடைத்து என்ப - தமக்கு இயல்பாகிய பெண்மை மேலும் ஒரு பெண்மை உடைத்து என்று சொல்லுவர் அறிந்தோர். (தலைமகளது உடன் போதல் துணிபு தோழியால் தெளிந்தானாகலின், தன் பிரிவின்மைக் குறிப்பினை அறிவுறுப்பான், அவள் பெண்மையினைப் பிறர்மேலிட்டு வியந்து கூறியவாறு.)
சாலமன் பாப்பையா
பெண்கள் தம் காதல் நோயைக் கண்ணாலேயே சொல்லி அதைத் தீர்க்கும்படி வேண்டுவது பெண்மை. மேலும் ஒரு பெண்மையைக் கொண்டிருப்பதாகும் என்பர் அறிந்தோர்.
Meaning in English
To show by eye the pain of love, and for relief to pray, Is womanhood's most womanly device, men say





