Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1279

இன்பத்துப்பால்கற்பியல்128. குறிப்பறிவுறுத்தல்

தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கிஅஃதாண் டவள்செய் தது.

toTinOkki mentOLum nOkki aTinOkkiaஃtAN TavaLsey tatu

Aiswarya Kalyani

பொருள் / உரை

முருகா எளிய உரை

'நீர் பிரிந்தால் இவை கழன்றுவிடும்' என்று தன் வளையல்களையும், 'அவை கழலும்படி இவை மெலியும்' என்று தன் மெல்லிய தோள்களையும், 'இவை நிகழாமல் நானும் உம்முடன் வருவேன்' என்று தன் அடிகளையும் பார்த்தாள்; அப்போது அவள் காட்டிய குறிப்பு உம்முடன் வருவதே ஆகும்!

• தொடி நோக்கி = 'நீர் பிரிந்தால் இவை கழன்றுவிடும்' என்று தன் வளையல்களைப் பார்த்து;• மென்தோளும் நோக்கி = 'வளையல் கழலும்படி இவை மெலியும்' என்று தன் மெல்லிய தோள்களையும் பார்த்து;• அடி நோக்கி = 'இவை நிகழாமல் நானும் உம்முடன் வருவேன்' என்று தன் பாதங்களையும் பார்த்தாள்;• ஆண்டு அவள் செய்தது அஃது = அப்போது அவள் காட்டிய குறிப்பு உம்முடன் உடன்போக்காக வருவதே ஆகும்!

மு.வரதராசன்

தன்னுடைய வளையல்களை நோக்கி, மெல்லிய தோள்களையும் நோக்கித் தன்னுடைய அடிகளையும் நோக்கி அவள் செய்த குறிப்பு உடன்போக்காகிய அதுவேயாகும்.

பரிமேலழகர்

(தலைமகள் குறிப்பறிந்த தோழி அதனைத் தலைமகற்கு அறிவித்தது.) (யான் அது தெளிவித்த வழி தெளியாது) தொடி நோக்கி - அவர் பிரிய யான் ஈண்டிருப்பின் இவை நில்லா எனத் தன் தொடியை நோக்கி; மென்தோளும் நோக்கி - அதற்கு ஏதுவாக இவை மெலியும் எனத் தன் மென்தோள்களையும் நோக்கி; அடி நோக்கி - பின் இவ்விரண்டும் நிகழாமல் நீர் நடந்து காத்தல் வேண்டும் எனத் தன் அடியையும் நோக்கி; ஆண்டு அவள் செய்தது அஃது - அங்ஙனம் அவள் செய்த குறிப்பு உடன் போக்காயிருந்தது.(செய்த குறிப்பு-செய்தற்கு ஏதுவாய குறிப்பு. 'அஃது' என்றாள், 'செறிதொடி செய்திறந்த கள்ளம்' (குறள். 1275)என்றானாகலின். பிரிதற்குறிப்புண்டாயின், அஃது அழுங்குதல் பயன்.)

சாலமன் பாப்பையா

நீ என்னைப் பிரிந்தால் இவை என்னுடன் இருக்கமாட்டா என்று கை வளையல்களைப் பார்த்தாள். துணையாக தன் மெல்லிய தோள்களும் மெலியும் என அவற்றைப் பார்த்தாள்; இவை இரண்டும் நடக்காதபடி நீர் நடந்து கொள்ள வேண்டும் என்று தன் பாதங்களையும் பார்த்தாள், பிரிந்தால் நானும் உடன் வருவேன் என்ற ஒரு குறிப்பும் இதனுள் இருக்கிறது.

Meaning in English

She viewed her tender arms, she viewed the armlets from them slid; She viewed her feet: all this the lady did

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout