Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1278

இன்பத்துப்பால்கற்பியல்128. குறிப்பறிவுறுத்தல்

நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்எழுநாளேம் மேனி பசந்து.

nerunaRRus senRAreng kAtalar yAmumezhunALEm mEni pasantu

Sarah Black

பொருள் / உரை

முருகா எளிய உரை

என் காதலர் என்னை விட்டுப் பிரிந்து சென்றது நேற்றுதான்; ஆயினும், என் உடல் வாடிப் பசலை நிறம் படர்ந்து ஏழு நாட்கள் பல நாட்கள் கழிந்துவிட்டதைப் போல ஆகிவிட்டதே!

• எம் காதலர் சென்றார் நெருநற்று = என் காதலர் என்னை விட்டுப் பிரிந்து சென்றது நேற்றுதான்;• யாமும் மேனி பசந்து = ஆயினும், என் உடல் வாடிப் பசலை நிறம் படர்ந்து,• எழுநாளேம் = ஏழு நாட்கள் பல நாட்கள் கழிந்துவிட்டதைப் போல ஆகிவிட்டதே!

மு.வரதராசன்

எம்முடைய காதலர் நேற்றுதான் பிரிந்து சென்றார்; யாமும் மேனி பசலை நிறம் அடைந்து ஏழு நாட்கள் ஆய்விட்ட நிலையில் இருக்கின்றோம்.

பரிமேலழகர்

(இதுவும் அது.) எம் காதலர் சென்றார் நெருநற்று - எம்காதலர் பிரிந்து போயினார் நெருநற்றே; யாமும் மேனி பசந்து எழுநாளேம் - அப்பிரிவிற்கு யாமும் மேனி பசந்து எழுநாள் உடையமாயினேம். ('நெருநற்றுச் செய்த தலையளியாற் பிரிவு துணியப்பட்டது' என்பாள், 'நெருநற்றுச் சென்றார்' என்றும், அதனை ஐயுற்றுச் செல்கின்றது ஏழுநாளுண்டாகலின்,அன்றே மேனி பசந்தது என்பாள். 'மேனி பசந்து எழுநாளேம்' என்றும் கூறினாள். இவ்வாற்றான் தலைமகனது பிரிதற் குறிப்பினை உணர்த்தி நின்றது.)

சாலமன் பாப்பையா

என் காதலர் நேற்றுத்தான் என்னைப் பிரிந்து போனார்; அப்பிரிவிற்கு வாடி என் மேனியின் நிறம் வேறுபட்டு ஏழு நாள்களாகிவிட்டன.

Meaning in English

My loved one left me, was it yesterday? Days seven my pallid body wastes away

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout