Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1277

இன்பத்துப்பால்கற்பியல்128. குறிப்பறிவுறுத்தல்

தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்முன்னம் உணர்ந்த வளை.

taNNan tuRaivan taNantamai namminummunnam uNarnta vaLai

Amritha Sunitha

பொருள் / உரை

முருகா எளிய உரை

குளிர்ந்த நீர்த்துறைக்கு உரிய என் காதலன் என்னோடு உடலால் கூடியிருந்தாலும் மனத்தால் பிரிய நினைத்ததை, நான் உணர்வதற்கு முன்னரே என் கையின் வளையல்கள் உணர்ந்து கொண்டு மெலிந்து கழன்று விட்டனவே!

• தண்ணம் துறைவன் தணந்தமை = குளிர்ந்த நீர்த்துறைக்கு உரிய என் காதலன் என்னோடு உடலால் கூடியிருந்தாலும் மனத்தால் பிரிய நினைத்ததை;• நம்மினும் = நான் குறிப்பால் உணர்வதற்கு முன்னரே,• வளை முன்னம் உணர்ந்த = என் கை வளையல்கள் முன்னதாகவே உணர்ந்து கழன்று விட்டனவே!

மு.வரதராசன்

குளிர்ந்த துறையை உடைய காதலன் பிரிந்த பிரிவை நம்மை விட முன்னம‌ே நம்முடைய வளையல்கள் உணர்ந்து கழன்று விட்டனவே!

பரிமேலழகர்

(இதுவும் அது.) தண்ணந்துறைவன் தணந்தமை - குளிர்ந்த துறையை உடையவன் நம்மை மெய்யாற் கூடியிருந்தே மனத்தாற் பிரிந்தமையை; நம்மினும் வளை முன்னம் உணர்ந்த - அவன் குறிப்பான் அறிதற்குரிய நம்மினும் இவ்வளைகள் முன்னே அறிந்தன. (கருத்து நிகழ்ந்ததாகலின், 'தணந்தமை' என்றும், 'யான் தெளிய உணர்தற்கு முன்னே தோள்கள் மெலிந்தன' என்பாள், அதனை வளைமேலேற்றி, அதுதன்னை உணர்வு உடைத்தாக்கியும் கூறினாள்.)

சாலமன் பாப்பையா

குளிர்ந்த துறைகளுக்குச் சொந்தக்காரரான அவர் என்னை உடலால் கூடி உள்ளத்தால் பிரிந்திருப்பதை என்னைக் காட்டிலும் என் கை வளையல்கள் முன்னமே அறிந்துவிட்டன.

Meaning in English

My severance from the lord of this cool shore, My very armlets told me long before

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout