Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1276

இன்பத்துப்பால்கற்பியல்128. குறிப்பறிவுறுத்தல்

பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றிஅன்பின்மை சூழ்வ துடைத்து.

peritARRip peTpak kalattal aritARRianpinmai sUzhva tuTaittu

Anbudan Adhvaith

பொருள் / உரை

முருகா எளிய உரை

காதலர் என் பிரிவுத் துன்பத்தை ஆற்றி நான் மகிழுமாறு ஆரத் தழுவி அளவற்ற அன்பு காட்டுவதானது, விரைவில் என்னை மீண்டும் பிரிந்து சென்று அன்பில்லாமல் கைவிட எண்ணுகின்ற ஒரு ரகசியக் குறிப்பைக் கொண்டதாக இருக்கின்றது!

• பெரிது ஆற்றி பெட்ப கலத்தல் = காதலர் என் பிரிவுத் துன்பத்தை ஆற்றி நான் மகிழுமாறு ஆரத் தழுவி அளவற்ற அன்பு காட்டுவது;• அரிது ஆற்றி = என்னைப் பிரிந்து சென்று,• அன்பின்மை சூழ்வது உடைத்து = மீண்டும் அன்பு காட்டாமல் கைவிட எண்ணுகின்ற ஒரு பிரிவுக் குறிப்பைக் கொண்டதாக இருக்கின்றது!

மு.வரதராசன்

பெரிதும் அன்பு செய்து விரும்புமாறு கூடுதல், அரிதாகிய பிரிவைச் செய்து பிறகு அன்பில்லாமல்கைவிட எண்ணுகின்ற குறிப்பை உடையதாகும்.

பரிமேலழகர்

(தலைமகன் குறிப்பறிந்த தலைமகள், அதனை அது தெளிவிக்கச் சென்ற தோழிக்கு அறிவுறுத்தது.) பெரிது ஆற்றிப் பெட்பக்கலத்தல் - காதலர் வந்து தம் பிரிவினானாய துன்பத்தினை மிகவும் ஆற்றி நாம் மகிழும் வண்ணம் கலக்கின்ற கலவி; அரிது ஆற்றி அன்பின்மை சூழ்வது உடைத்து - இருந்தவாற்றான் மேலும் அத்துன்பத்தினை அரிதாக ஆற்றியிருந்து அவரது அன்பின்மையை நினையும் தன்மையுடைத்து.(பிரிதற் குறிப்பினாற் செய்கின்றதாகலான் முடிவில் இன்னாதாகா நின்றது என்பதாம்.)

சாலமன் பாப்பையா

அவரைப் பிரிந்து இருந்ததால் ஏற்பட்ட துன்பத்தினைப் பெரிதும் பொறுத்துக் கொண்டு இப்போது நான் மகிழும் வண்ணம் அவர் என்னைக் கூடுவது அவரது அன்பின்மையை எண்ணிப் பார்க்கச் செய்கிறது.

Meaning in English

While lovingly embracing me, his heart is only grieved: It makes me think that I again shall live of love bereaved

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout