ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்நன்றாகா தாகி விடும்.
onRAnun tIssol poruTpayan uNTAyinnanRAkA tAki viTum
Amirthavarshini
பொருள் / உரை
முருகா எளிய உரை
பாலில் விழுந்த விடம் ஒரு துளியே!தீயசொல் ஒன்றின் கொடுந்தீங்கு இதுவே!அவன்தான் செய்த நல்லறங்கள் யாவுமே!பயனில்லாமலே பாழாகிப் போகுமே!
• தீச்சொல் = தீய சொல்லினால் பிறருக்கு வரும்• பொருட்பயன் = துன்பத்தின் விளைவு• ஒன்றானும் உண்டாயின் = ஒன்றே ஒன்று ஒருவனிடம் உண்டானாலும்,• நன்றாகாதாகி விடும் = அவன் செய்த மற்ற நற்செயல்களின் பயன்கள் அனைத்தும் பாழாகிவிடும்.
மு.வரதராசன்
தீய சொற்களின் பொருளால் விளையும் தீமை ஒன்றாயினும் ஒருவனிடம் உண்டானால், அதனால் மற்ற அறங்களாலும் நன்மை விளையாமல் போகும்.
பரிமேலழகர்
தீச்சொல் பொருள் பயன் ஒன்றானும் உண்டாயின்- தீயவாகிய சொற்களின் பொருள்களால் பிறர்க்கு வரும் துன்பம் ஒன்றாயினும் ஒருவன் பக்கல் உண்டாவதாயின்; நன்று ஆகாது ஆகிவிடும் - அவனுக்குப் பிற அறங்களான் உண்டான நன்மை தீதாய்விடும். (தீயசொல்லாவன - தீங்கு பயக்கும் பொய், குறளை, கடுஞ்சொல் என்பன. ஒருவன் நல்லவாகச் சொல்லும் சொற்களின் கண்ணே ஒன்றாயினும் 'தீச்சொற்படும் பொருளினது பயன் பிறர்க்கு உண்டாவதாயின்' என்று உரைப்பாரும் உளர்.)
சாலமன் பாப்பையா
தீய சொற்களின் பொருளால் பிறர்க்கு வரும் துன்பம் சிறிதே என்றாலும் அந்தக் குறை ஒருவனிடம் இருந்தால் அவனுக்குப் பிற அறங்களால் வரும் நன்மையம் தீமையாகப் போய்விடும்.
Meaning in English
Though some small gain of good it seem to bring, The evil word is parent still of evil thing





