Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 127

அறத்துப்பால்இல்லறவியல்13. அடக்கமுடைமை

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

yAkAvA rAyinum nAkAkka kAvAkkARsOkAppar sollizhukkup paTTu

Mohan Vaidhya

பொருள் / உரை

முருகா எளிய உரை

எதையுமே காக்கத் தவறிடலாமே!நாவையேனும் அடக்கிக் காக்கவேண்டுமே!அந்த நாவைக் காவாமல் விட்டிடுவோரே!சொற்குற்றத்தில் சிக்குண்டு வருந்துவரே!

• யாகாவாராயினும் = எவற்றைக் காக்க முடியாவிட்டாலும்,• நாகாக்க = நாவையாவது அடக்கிக் காக்க வேண்டும்;• காவாக்கால் = அப்படிக் காக்காவிட்டால்• சொல்லிழுக்குப் பட்டு = தவறான சொற்குற்றத்தில் சிக்கி• சோகாப்பர் = பெருந்துன்பம் அடைந்து வருந்துவர்.

மு.வரதராசன்

காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்கா விட்டாலும் நாவையாவது காக்க வேண்டு்ம்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.

பரிமேலழகர்

யாகாவாராயினும் நாகாக்க - தம்மால் காக்கப்படுவன எல்லாவற்றையும் காக்க மாட்டாராயினும் நாவொன்றனையும் காக்க, காவாக்கால் சொல் இழுக்குப்பட்டுச் சோகாப்பர் - அதனைக் காவாராயின் சொல் இழுக்குப்பட்டுச் சோகாப்பர் - அதனைக் காவாராயின் சொற்குற்றத்தின்கண் பட்டுத் தாமே துன்புறுவர். ('யா' என்பது அஃறிணைப் பன்மை வினாப்பெயர். அஃது ஈண்டு எஞ்சாமை உணர நின்றது. முற்று உம்மை விகாரத்தால் தொக்கது. சொற்குற்றம் - சொல்லின்கண் தோன்றும் குற்றம். 'அல்லாப்பர்செம்மாப்பர்' என்பன போலச் 'சோகாப்பர்' என்பது ஒரு சொல்.)

சாலமன் பாப்பையா

எதைக் காக்க முடியாதவரானாலும் நா ஒன்றையாவது காத்துக் கொள்ள வேண்டும். முடியாது போனால் சொல்குற்றத்தில் சிக்கித் துன்பப்படுவர்.

Meaning in English

Whate'er they fail to guard, o'er lips men guard should keep; If not, through fault of tongue, they bitter tears shall weep

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout