ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்எழுமையும் ஏமாப் புடைத்து.
orumaiyuL AmaipOl aintaTakkal ARRinezhumaiyum EmAp puTaittu
Ranjini Pradeep
பொருள் / உரை
முருகா எளிய உரை
ஆமையைப் போல ஆபத்தில் ஒடுங்கிடுமே!ஐம்பொறியைப் பிறவியில் அடக்கிடுமே!அஃது எழுபிறவிக்கும் அரணாகுமே!அழியாத காவலரண் ஆகி நிற்குமே!
• ஒருமையுள் = இந்த ஒரு பிறவியில்,• ஆமைபோல் = (ஆபத்து நேரும்போது உறுப்புகளை அடக்கிக் கொள்ளும்) ஆமையைப் போல,• ஐந்து அடக்கல் ஆற்றின் = தன் ஐம்பொறிகளையும் தீய வழிகளில் செல்லாமல் அடக்க வல்லவனானால்,• எழுமையும் = அவனுக்குத் தொடரும் ஏழு பிறவிகளிலும்• ஏமாப்பு உடைத்து = அதுவே அழியாத பாதுகாப்புக் கோட்டையாக நின்று உதவும்.
மு.வரதராசன்
ஒரு பிறப்பில், ஆமைபோல் ஐம்பொறிகளையும் அடக்கியாள வல்லவனானால், அஃது அவனுக்குப் பல பிறப்பிலும் காப்பாகும் சிறப்பு உடையது.
பரிமேலழகர்
ஆமை போல் ஒருமையுள் ஐந்து அடக்கல் ஆற்றின் - ஆமைபோல, ஒருவன் ஒரு பிறப்பின்கண் ஐம்பொறிகளையும் அடக்கவல்லன் ஆயின்; எழுமையும் ஏமாப்பு உடைத்து - அவ் வன்மை அவனுக்கு எழுபிறப்பின் கண்ணும் அரண் ஆதலை உடைத்து. (ஆமை ஐந்து உறுப்பினையும் இடர் புகுதாமல் அடக்குமாறு போல இவனும் ஐம்பொறிகளையும் பாவம் புகுதாமல் அடக்க வேண்டும் என்பார் 'ஆமை போல்' என்றார். ஒருமைக்கண் செய்த வினையின் பயன் எழுமையும் தொடரும் என்பது இதனான் அறிக. இதனான் மெய்யடக்கம் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
ஆமை தன் நான்கு கால், ஒரு தலை ஆகிய ஐந்து உறுப்புகளையும் ஆபத்து வரும்போது ஓட்டுக்குள் மறைத்துக் கொள்வது போல, ஒருவன் தன் ஒரு பிறப்பில் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளையும் அறத்திற்கு மாறான தீமை வரும்போது அடக்கும் ஆற்றல் பெறுவான் என்றால், அது அவனுக்குப் பிறவி தோறும் ஏழு பிறப்பிலும் - அரணாக இருந்து உதவும்.
Meaning in English
Like tortoise, who the five restrains In one, through seven world bliss obtains





