Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 125

அறத்துப்பால்இல்லறவியல்13. அடக்கமுடைமை

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்செல்வர்க்கே செல்வம் தகைத்து.

ellArkkum nanRAm paNital avaruLLumselvarkkE selvam takaittu

Balram

பொருள் / உரை

முருகா எளிய உரை

அகங்காரம் இன்றிப் பணிவாய் வாழ்வதே!எல்லோருக்குமே பயனைத் தருவதே!செல்வம் மிகப் படைத்தோர்க்கு அதுவுமே!மேலுமொரு செல்வமாகவே ஆகுமே!

• பணிதல் = அடக்கத்தோடும் பணிவோடும் நடப்பது• எல்லார்க்கும் நன்றாம் = மனிதர்கள் அனைவருக்கும் நன்மை தருவதாகும்;• அவருள்ளும் = அவர்களுள் குறிப்பாக,• செல்வர்க்கே = செல்வம் படைத்தவர்களுக்கு• செல்வம் தகைத்து = அந்தப் பணிவே மேலும் ஒரு சிறந்த செல்வமாகும்.

மு.வரதராசன்

பணிவுடையவராக ஒழுகுதல்பொதுவாக எல்லோர்க்கும் நல்லதாகும்; அவர்களுள் சிறப்பாகச் செல்வர்க்கே மற்றொரு செல்வம் போன்றதாகும்.

பரிமேலழகர்

பணிதல் எல்லார்க்கும் நன்றாம் - பெருமிதம் இன்றி அடங்குதல் எல்லார்க்கும் ஒப்ப நன்றே எனினும்; அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து - அவ்வெல்லாருள்ளும் செல்வம் உடையார்க்கே வேறொரு செல்வம் ஆம் சிறப்பினை உடைத்து. (பெருமிதத்தினைச் செய்யுங் கல்வியும் குடிப்பிறப்பும் உடையார் அஃது இன்றி அவை தம்மானே அடங்கியவழி அவ்வடக்கஞ் சிறந்து காட்டாது ஆகலின், 'செல்வர்க்கே செல்வம் தகைத்து' என்றார். 'செல்வத்தகைத்து' என்பது மெலிந்து நின்றது. பொது என்பாரையும் உடம்பட்டுச் சிறப்பாதல் கூறியவாறு. இவை ஐந்து பாட்டானும் பொதுவகையான் அடக்கத்தது சிறப்புக் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

செருக்கு இல்லாமல் அடக்கமாக வாழ்வது எல்லார்க்குமே நல்லதுதான்; அவ் எல்லாருள்ளும் செல்வர்களுக்கு அது மேலும் ஒரு செல்வமாக விளங்கும்.

Meaning in English

To all humility is goodly grace; but chief to them With fortune blessed, -'tis fortune's diadem

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout