Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 124

அறத்துப்பால்இல்லறவியல்13. அடக்கமுடைமை

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்மலையினும் மாணப் பெரிது.

nilaiyin tiriyA taTangkiyAn tORRammalaiyinum mANap peritu

Maanasi G Kannan

பொருள் / உரை

முருகா எளிய உரை

நல்லொழுக்க நிலையில் மாறாமலே!அடங்கிவாழும் ஒருவன் தோற்றமே!விண்ணுயர்ந்த மலையை விடவுமே!மாண்புமிக்க பெரிதாய் இருக்குமே!

• நிலையின் திரியாது = தன் நல்லொழுக்க நிலையிலிருந்து மாறுபடாமல்• அடங்கியான் = அடக்கத்தோடு வாழ்பவனது• தோற்றம் = உயர்ச்சியானது (மாண்பானது),• மலையினும் = விண்ணைத் தொடும் மலையைக் காட்டிலும்• மாணப் பெரிது = மிகவும் உயர்ந்ததாகும்.

மு.வரதராசன்

தன் நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகுவோனுடைய உயர்வு, மலையின் உயர்வை விட மிகவும் பெரிதாகும்.

பரிமேலழகர்

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் - இல்வாழ்க்கையாகிய தன் நெறியின் வேறுபடாது நின்று அடங்கியவனது உயர்ச்சி, மலையினும் மாணப்பெரிது - மலையின் உயர்ச்சியினும் மிகப் பெரிது. (திரியாது அடங்குதல் - பொறிகளால் புலன்களை நுகராநின்றே அடங்குதல். 'மலை' ஆகுபெயர்.)

சாலமன் பாப்பையா

தன் நேர்மையான வழியை விட்டு விலகாது, அடக்கத்துடன் வாழ்பவனைப் பற்றிய பிறர் மனத் தோற்றம் மலையைக் காட்டிலும் மிக உயரமானது.

Meaning in English

In his station, all unswerving, if man self subdue, Greater he than mountain proudly rising to the view

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout