Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 123

அறத்துப்பால்இல்லறவியல்13. அடக்கமுடைமை

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்துஆற்றின் அடங்கப் பெறின்.

seRivaRintu sIrmai payakkum aRivaRintARRin aTangkap peRin

Vidyasagar

பொருள் / உரை

முருகா எளிய உரை

அடக்கம் அறிவென உணர்பவனே!அறவழியில் அடங்கி வாழ்பவனே!தன் அடக்கத்தின் மேன்மையை உணர்வரே!சான்றோர் பெரும்புகழைத் தந்திடுவரே!

• அறிவறிந்து = அடங்கி வாழ்வதே அறிவுடைமை என்பதை அறிந்து,• ஆற்றின் = அறநெறி வழியில்• அடங்கப் பெறின் = ஒருவன் அடக்கத்தோடு வாழ்ந்தால்,• செறிவு அறிந்து = அவனது அடக்கத்தின் மேன்மையை உணர்ந்து,• சீர்மை பயக்கும் = சான்றோர்கள் அவனுக்கு அழியாத பெரும் புகழைத் தருவர்.

மு.வரதராசன்

அறிய வேண்டியவற்றை அறிந்து, நல்வழியில் அடங்கி ஒழுகப்பெற்றால், அந்த அடக்கம் நல்லோரால் அறியப்பட்டு மேன்மை பயக்கும்.

பரிமேலழகர்

அறிவு அறிந்து ஆற்றின் அடங்கப் பெறின் - அடங்குதலே நமக்கு அறிவாவது என்று அறிந்து நெறியானே ஒருவன் அடங்கப் பெறின்; செறிவு அறிந்து சீர்மை பயக்கும் - அவ்வடக்கம் நல்லோரான் அறியப்பட்டு அவனுக்கு விழுப்பத்தைக் கொடுக்கும். (இல்வாழ்வானுக்கு அடங்கும் நெறியாவது, மெய்ம்முதல் மூன்றும் தன்வயத்த ஆதல்.)

சாலமன் பாப்பையா

அடக்கத்துடன் வாழ்வதே அறிவுடைமை என்று அறிந்து, ஒருவன் அடக்கமாக வாழ்ந்தால் அவனது அடக்கம் நல்லவர்களால் அறியப்பட்டு அது அவனுக்குப் பெருமையைக் கொடுக்கும்.

Meaning in English

If versed in wisdom's lore by virtue's law you self restrain Your self-repression known will yield you glory's gain

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout