காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்அதனினூஉங் கில்லை உயிர்க்கு.
kAkka poruLA aTakkattai AkkamataninUung killai uyirkku
Keerthana Bhat
பொருள் / உரை
முருகா எளிய உரை
அடக்கமுடைமை பெருஞ்செல்வமாமே!போற்றியே காத்திடுவாய் அதை என்றுமே!மனித உயிர்க்கு மேலொன்று இல்லையே!வேறு பெருஞ்செல்வம் ஒன்றுமே இல்லையே!
• அடக்கத்தை = அடக்கமுடைமை என்னும் நற்பண்பை• பொருளாகக் காக்க = சிறந்த செல்வமாகக் கருதிப் போற்றிப் பாதுகாக்க வேண்டும்;• உயிர்க்கு = ஒரு மனிதனின் உயிருக்கு• அதனினூஉங்கு = அந்த அடக்கத்தை விட மேம்பட்ட• ஆக்கம் இல்லை = சிறந்த பெருஞ்செல்வம் (ஆக்கம்) வேறு இல்லை.
மு.வரதராசன்
அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு போற்றிக் காக்க வேண்டும். அந்த அடக்கத்தைவிட மேம்பட்ட ஆக்கம் உயிர்க்கு இல்லை.
பரிமேலழகர்
உயிர்க்கு அதனின் ஊங்கு ஆக்கம் இல்லை - உயிர்கட்கு அடக்கத்தின் மிக்க செல்வம் இல்லை; அடக்கத்தைப் பொருளாகக் காக்க - ஆதலான் அவ்வடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு அழியாமல் காக்க. (உயிர் என்பது சாதியொருமை. அஃது ஈண்டு மக்கள் உயிர்மேல் நின்றது, அறிந்து அடங்கிப் பயன் கொள்வது அதுவே ஆகலின்.)
சாலமன் பாப்பையா
அடக்கத்தைச் செல்வமாக எண்ணிக் காக்க; அதைக் காட்டிலும் பெரிய செல்வம் வேறு இல்லை.
Meaning in English
Guard thou as wealth the power of self-control; Than this no greater gain to living soul





