Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 121

அறத்துப்பால்இல்லறவியல்13. அடக்கமுடைமை

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமைஆரிருள் உய்த்து விடும்.

aTakkam amararuL uykkum aTangkAmaiAriruL uyttu viTum

Deva

பொருள் / உரை

முருகா எளிய உரை

புலன்களை அடக்கிடும் அடக்கமே!அமரருள் புகழினைச் சேர்த்திடுமே!அடங்காமலே வாழும் அகங்காரமே!ஆரிருள் நரகத்திலே ஆழ்த்திடுமே!

• அடக்கம் = புலன்களை அடக்கி வாழும் அடக்கமானது• அமரருள் உய்க்கும் = தேவர் உலகிற்கு நிகரான உயர்ந்த புகழில் சேர்க்கும்;• அடங்காமை = புலனடக்கம் இல்லாத செருக்கானது• ஆரிருள் = மீள முடியாத காரிருள் போன்ற நரகத் துன்பத்தில்• உய்த்து விடும் = ஒருவனைத் தள்ளிவிடும்.

மு.வரதராசன்

அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்; அடக்கம் இல்லாதிருத்தல், பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில் செலுத்தி விடும்.

பரிமேலழகர்

அடக்கம் அமரருள் உய்க்கும் - ஒருவனை அடக்கம் ஆகிய அறம் பின் தேவருலகத்து உய்க்கும் ; அடங்காமை ஆர்இருள் உய்த்துவிடும் - அடங்காமையாகிய பாவம் தங்குதற்கு அரிய இருளின்கண் செலுத்தும். ( 'இருள்' என்பது ஓர் நரக விசேடம். "எல்லாம் பொருளில் பிறந்துவிடும்" (நான்மணி.7) என்றாற்போல, 'உய்த்துவிடும்' என்பது ஒரு சொல்லாய் நின்றது.)

சாலமன் பாப்பையா

அடக்கம் ஒருவனைப் பிற்காலத்தில் தேவர் உலகிற்குக் கொண்டு சேர்க்கும்; அடங்காமல் வாழ்வதோ அவனை நிறைந்த இருளுக்குக் கொண்டு போகும்.

Meaning in English

Control of self does man conduct to bliss th' immortals share; Indulgence leads to deepest night, and leaves him there

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout