வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்பிறவும் தமபோல் செயின்.
vANikam seyvArkku vANikam pENippiRavum tamapOl seyin
Varshan
பொருள் / உரை
முருகா எளிய உரை
வாடிக்கையாளர் மற்றும் பிறருடைய பொருளையும் பணத்தையும் தனது சொந்தப் பொருள் போலக் கருதிப் பாதுகாத்து நேர்மையாக வியாபாரம் செய்வதே வணிகர்களுக்குரிய தலைசிறந்த வணிக தர்மமாகும்.
• பிறவும் = பிறர் பொருளையும்• தமபோல் = தம் சொந்தப் பொருள் போல• பேணிச் செயின் = போற்றிப் பாதுகாத்து வியாபாரம் செய்தால்,• வாணிகம் செய்வார்க்கு = வணிகர்களுக்கு• வாணிகம் = அதுவே தலைசிறந்த நல் வணிக முறையாகும்.
மு.வரதராசன்
பிறர் பொருளையும் தம் பொருள் போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரிய நல்ல வாணிக முறையாகும்.
பரிமேலழகர்
பிறவும் தமபோல் பேணிச் செயின் -பிறர் பொருளையும் தம்பொருள் போலப் பேணிச் செய்யின்; வாணிகம் செய்வார்க்கு வாணிகம் - வாணிகஞ்செய்வார்க்கு நன்றாய் வாணிகம் ஆம். (பிறவும் தமபோல் செய்தலாவது, கொள்வது மிகையும் கொடுப்பது குறையும் ஆகாமல் ஒப்ப நாடிச் செய்தல். இப்பாட்டு மூன்றனுள், முன்னைய இரண்டும் அவையத்தாரை நோக்கின்; எனையது வாணிகரை நோக்கிற்று, அவ்விருதிறத்தார்க்கும் இவ்வறம் வேறாகச் சிறந்தமையின்.)
சாலமன் பாப்பையா
பிறர் பொருளையும் தம் பொருள் போலக் காத்து, வியாபாரம் செய்தால் வியாபாரிகளுக்கு நல்ல வியாபார முறை ஆகும்.
Meaning in English
As thriving trader is the trader known, Who guards another's interests as his own





