சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையாஉட்கோட்டம் இன்மை பெறின்.
soRkOTTam illatu seppam orutalaiyAuTkOTTam inmai peRin
Mahesh Vinayakram
பொருள் / உரை
முருகா எளிய உரை
ஒருவனது உள்ளத்தில் எவர் பக்கமும் சாய்கின்ற பாரபட்ச எண்ணம் இல்லாமல் உறுதியாக இருக்குமானால், அவனது நாவிலிருந்து வெளிப்படும் சொல்லிலும் நீதி தவறாத நேர்மை இருக்கும்; அதுவே உண்மையான நடுவுநிலைமையாகும்.
• உட்கோட்டம் இன்மை = உள்ளத்தில் எந்தப் பாரபட்சக் கோணலும் இல்லாமல்• ஒருதலையாப் பெறின் = உறுதியாக இருக்குமானால்,• சொற்கோட்டம் இல்லது = பேசும் சொல்லிலும் எந்தக் கோணலும் இன்றி நீதி பிறக்கும்;• செப்பம் = அதுவே உண்மையான நடுவுநிலைமை ஆகும்.
மு.வரதராசன்
உள்ளத்தில் கோணுதல் இல்லாத தன்மையை உறுதியாகப் பெற்றால், சொல்லிலும் கோணுதல் இல்லாதிருத்தல் நடுவுநிலைமையாம்.
பரிமேலழகர்
செப்பம் சொற்கோட்டம் இல்லது - நடுவு நிலைமையாவது சொல்லின்கண் கோடுதல் இல்லாததாம்; உள்கோட்டம் இன்மை ஒருதலையாப் பெறின் (சொல் : ஊழான் அறுத்துச் சொல்லுஞ் சொல். காரணம் பற்றி ஒருபால் கோடாத மனத்தோடு கூடுமாயின், அறம் கிடந்தவாறு சொல்லுதல் நடுவு நிலைமையாம்; எனவே, அதனோடு கூடாதாயின் அவ்வாறு சொல்லுதல் நடுவு நிலைமை அன்று என்பது பெறப்பட்டது. அஃது அன்னதாவது மனத்தின் கண் கோட்டம் இன்மையைத் திண்ணிதாகப் பெறின் என்றவாறு.)
சாலமன் பாப்பையா
மனம் ஓரஞ் சாராமல் சமமாக நிற்குமானால் சொல்லிலும் அநீதி பிறக்காது; அதுவே நீதி.
Meaning in English
Inflexibility in word is righteousness, If men inflexibility of soul possess





