Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1273

இன்பத்துப்பால்கற்பியல்128. குறிப்பறிவுறுத்தல்

மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தைஅணியில் திகழ்வதொன்று உண்டு.

maNiyil tikazhtaru nUlpOl maTantaiaNiyil tikazhvaton RuNTu

Shaan

பொருள் / உரை

முருகா எளிய உரை

கோக்கப்பட்ட ஒளிவீசும் பளிங்கு மணிக்குள் மறைந்திருக்கும் நூல் வெளியே தெளிவாகத் தெரிவது போல, என் காதலியின் உடலழகிற்குள்ளே இருந்து வெளியே புலனாகும் ஒரு மறைவான உள்ளக் குறிப்பு இருக்கின்றது!

• மணியில் திகழ்தரு நூல் போல் = கோக்கப்பட்ட பளிங்கு மணிக்குள் மறைந்திருக்கும் நூல் வெளியே தெளிவாகத் தெரிவது போல;• மடந்தை அணியில் = என் காதலியின் இயற்கை அழகிற்குள்ளே இருந்து,• திகழ்வது ஒன்று உண்டு = வெளியே புலனாகும் ஒரு மறைவான குறிப்பு இருக்கின்றது!

மு.வரதராசன்

( கோத்த) மணியினுள் விளங்கும் நூலைப் போல் என் காதலியின் அழகினுள் விளங்குவதான குறிப்பு ஒன்று இருக்கின்றது.

பரிமேலழகர்

(இதுவும் அது.) மணியில் திகழ்தரும் நூல்போல் - கோக்கப்பட்ட பளிக்கு மணியகத்துக் கிடந்து புறத்துப் புலனாம் நூல் போல; மடந்தை அணியில் திகழ்வது ஒன்று உண்டு - இம்மடந்தையது அணியகத்துக் கிடந்து புறத்துப் புலனாகின்றதொரு குறிப்பு உண்டு.(அணி - புணர்ச்சியான் ஆய அழகு. அதனகத்துக் கிடத்தலாவது, அதனோடு உடன் நிகழ்தற்பாலதன்றி வைத்து உடனிகழ்தல். 'அதனை யான்அறிகின்றிலேன், நீ அறிந்து கூறல் வேண்டும்', என்பது கருத்து.)

சாலமன் பாப்பையா

கோக்கப்பட்ட பளிங்கிற்குள் கிடந்து வெளியே தெரியும் நூலைப் போல இவளின் அழகிற்குள் கிடந்து வெளியே தெரியும் குறிப்பு ஒன்று உண்டு.

Meaning in English

As through the crystal beads is seen the thread on which they 're strung So in her beauty gleams some thought cannot find a tongue

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout