Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1272

இன்பத்துப்பால்கற்பியல்128. குறிப்பறிவுறுத்தல்

கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்பெண்நிறைந்த நீர்மை பெரிது.

kaNNiRainta kArikaik kAmpErtOT pEtaikkuppeNniRainta nIrmai peritu

G. V. Prakash

பொருள் / உரை

முருகா எளிய உரை

என் கண்களைக் கவரும் பேரழகும் மூங்கில் போன்ற மெல்லிய தோள்களையும் உடைய என் இளம் காதலிக்கு, பெண்களுக்கே உரிய நாணமும் மன அடக்கமும் கொண்ட சிறந்த இயல்பு மிக அதிகமாக நிரம்பியுள்ளது!

• கண் நிறைந்த காரிகை = என் கண்களைக் கவரும் அழகும்,• காம்பு ஏர் தோள் = மூங்கில் போன்ற அழகான தோள்களையும் உடைய,• பேதைக்கு = என் இளம் காதலிக்கு;• பெண் நிறைந்த நீர்மை பெரிது = பெண்களுக்கே உரிய நாணமும் மன அடக்கமும் கொண்ட இயல்பு மிக அதிகமாக இருக்கின்றது!

மு.வரதராசன்

கண் நிறைந்த அழகும் மூங்கில் போன்ற தோளும் உடைய என் காதலிக்குப் பெண்மைத்தன்மை நிறைந்து விளங்கும் இயல்பு மிகுதியாக உள்ளது.

பரிமேலழகர்

(நாணால் அவள் அது சொல்லாளாயவழி அவன் தோழிக்குச் சொல்லியது.) கண் நிறைந்த காரிகைக் காம்பு ஏர் தோள் பேதைக்கு - என் கண்ணிறைந்த அழகினையும் வேயையொத்த தோளினையும் உடைய நின் பேதைக்கு; பெண் நிறைந்த நீர்மை பெரிது - பெண்பாலரிடத்து நிறைந்த மடமை அவ்வளவன்றி மிகுந்தது. (இலதாய பிரிவினைத் தன்கண் ஏற்றி அதற்கு அஞ்சுதலான், இவ்வாறு கூறினான்.)

சாலமன் பாப்பையா

என் கண் நிறைந்த அழகையும், மூங்கிலைப் போன்ற தோளையும் உடைய இப்பேதைக்குப் பெண்கள் எல்லாரிடமும் இருக்கும் குண மேன்மையிலும் அதிக மேன்மை இருக்கிறது.

Meaning in English

The simple one whose beauty fills mine eye, whose shoulders curve Like bambu stem, hath all a woman's modest sweet reserve

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout