வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்பைதல்நோய் எல்லாம் கெட.
varukaman koNkaN orunAT parukuvanpaitalnOy ellAm keTa
DD-Media-29
பொருள் / உரை
முருகா எளிய உரை
என் காதலன் ஒருநாளாவது என்னிடம் திரும்பி வருவானாக; அவன் வந்த பிறகு, என்னை வாட்டும் இந்தப் பிரிவுத் துன்ப நோய் எல்லாம் அடியோடு தீரும்படி அவனது இனிய காதலை என் ஐம்புலன்களாலும் அமுதம் போல் பருகுவேன்!
• கொண்கன் ஒருநாள் வருக = என் காதலன் ஒருநாளாவது என்னிடம் திரும்பி வருவானாக;• வந்தபின், பைதல் நோய் எல்லாம் கெட = அவன் வந்த பிறகு, என்னை வாட்டும் இந்தப் பிரிவுத் துன்ப நோய் எல்லாம் அடியோடு தீரும்படி,• பருகுவன் = அவனது இனிய காதலை என் ஐம்புலன்களாலும் அமுதம் போல் பருகுவேன்!
மு.வரதராசன்
என் காதலன் ஒருநாள் என்னிடம் வருவானாக; வந்த பிறகு, என்னுடைய துன்பநோய் எல்லொம் தீருமாறு நான் நன்றாக நுகர்வேன்.
பரிமேலழகர்
(இதுவும் அது.) கொண்கன் ஒருநாள் வருக - இத்துணைநாளும் வாராக் கொண்கன் ஒருநாள் என்கண் வருவானாக; பைதல் நோயெல்லாம் கெடப் பருகுவன் - வந்தால் பையுளைச் செய்கின்ற இந்நோயெல்லாம் கெட அவ்வமிழ்தத்தை வாயில்கள் ஐந்தானும் பருகக் கடவேன். ('வருக' என்பதற்கும் 'மன்' என்பதற்கும் மேல் உரைத்தவாறே கொள்க. அக்குறிப்பு 'அவ்வொரு நாளைக்குள்ளே இனி வரக்கடவ நோய்களும் கெடுப்பல்' என்பதாம்.)
சாலமன் பாப்பையா
என் காதலன் ஒருநாள் என்னிடம் வருவானாக; வந்த பிறகு, என்னுடைய துன்ப நோய் எல்லொம் தீருமாறு நான் நன்றாக நுகர்வேன்.
Meaning in English
O let my spouse but come again to me one day! I'll drink that nectar: wasting grief shall flee away





