Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1265

இன்பத்துப்பால்கற்பியல்127. அவர்வயின்விதும்பல்

காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்நீங்கும்என் மென்தோள் பசப்பு.

kANkaman koNkanaik kaNNArak kaNTapinnIngkumen mentOL pasappu

VY THA RA MOORTHI வை தா ர மூர்த்தி

பொருள் / உரை

முருகா எளிய உரை

சொல் பொருள் (பதவுரை):• கொண்கனைக் கண்ணாரக் காண்க = என் காதலரை என் கண்கள் குளிரக் காண்பேனாக;• கண்டபின் = அவ்வாறு அவரைக் கண்ட பிறகு,• என் மென்தோள் பசப்பு நீங்கும் = என் மெல்லிய தோள்களில் படர்ந்துள்ள இந்த வாட்டமும் பசலை நிறமும் தானாகவே நீங்கிப் போய்விடும்!எளிய விளக்கம்:என் காதலரை என் கண்கள் குளிரக் காண்பேனாக; அவ்வாறு என் ஆசைதீர அவரைக் கண்ட பிறகு, என் மெல்லிய தோள்களில் படர்ந்துள்ள இந்த வாட்டமும் பசலை நிறமும் தானாகவே மறைந்து போய்விடும்!

மு.வரதராசன்

என் காதலரைக் கண்ணாரக் காண்பேனாக; கண்ட பிறகு என்னுடைய மெல்லிய தோளில் உண்டாகிய பசலை நிறம் தானே நீங்கி விடும்.

பரிமேலழகர்

(தலைமகன் வரவு கூற ஆற்றாயாய்ப் பசக்கற்பாலையல்லை என்ற தோழிக்குச சொல்லியது.) கண் ஆரக் கொண்கனைக் காண்க - என் கண்கள் ஆரும் வகை என் கொண்கனை யான் காண்பேனாக; கண்ட பின் என் மென்தோள் பசப்பு நீங்கும் - அங்ஙனம் கண்டபின் என் மெல்லிய தோள்களின்கண் பசப்புத் தானே நீங்கும்.('காண்க' என்பது ஈண்டு வேண்டிக் கோடற்பொருட்டு. அதுவேண்டும் என்பதுபட நின்றமையின் 'மன்' ஒழியிசைக்கண்வந்தது. 'கேட்ட துணையான் நீங்காது' என்பதாம்.)

சாலமன் பாப்பையா

என் கண்கள் முழுக்க என் கணவரை நான் காண்பேனாகுக; அவரைக் கண்டபின் என் மெல்லிய தோளின் வாடிய நிறம் தானாக நீங்கும்.

Meaning in English

O let me see my spouse again and sate these longing eyes! That instant from my wasted frame all pallor flies

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout