உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்வரல்நசைஇ இன்னும் உளேன்.
urannasaii uLLam tuNaiyAkas senRArvaralnasaii innum uLEn
Amirthavarshini
பொருள் / உரை
முருகா எளிய உரை
தன் கடமையில் வெற்றி பெறுவதையே விரும்பி, தன் ஊக்கத்தையே தனக்குத் துணையாகக் கொண்டு பிரிந்து சென்ற என் காதலர் மீண்டும் திரும்பி வருவார் என்ற ஆசையினால்தான், நான் இன்னும் இந்த உடம்பில் உயிரைத் தாங்கிக் கொண்டிருக்கின்றேன்!
• உரன் நசைஇ = தன் கடமையில் வெற்றி பெறுவதையே விரும்பி,• உள்ளம் துணையாகச் சென்றார் = தன் ஊக்கத்தையே தனக்குத் துணையாகக் கொண்டு பிரிந்து சென்ற என் காதலர்,• வரல் நசைஇ = மீண்டும் திரும்பி வருவார் என்ற ஆசையினால்தான்,• இன்னும் உளேன் = நான் இன்னும் இந்த உடம்பில் உயிரைத் தாங்கிக் கொண்டிருக்கின்றேன்!
Murugaa simple commentary
Desiring only to achieve victory in his duty, only out of the desire that my lover who parted taking his own zeal as his companion will return again, I am still holding on to life in this body!
• Uran nasaii = Desiring only to achieve victory in his duty,• Ullam thunaiyaagach chendraar = My lover who parted taking his own zeal as his companion,• Varal nasaii = Only out of the desire that he will return again,• Innum ulaen = I am still holding on to life in this body!
Machine translation from the Tamil
மு.வரதராசன்
வெற்றியை விரும்பி ஊக்கமே துணையாகக் கொண்டு வெளிநாட்டுக்குச் சென்ற காதலர், திரும்பி வருதலைக் காண விரும்பியே இன்னும் யான் உயிரோடு இருக்கின்றேன்.
பரிமேலழகர்
(இதுவும் அது.) உரன் நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார் - இன்பம் நுகர்தலை நச்சாது வேறலை நச்சி நாம் துணையாதலை இகழ்ந்து தம்ஊக்கம் துணையாகப் போனார்; வரல் நசைஇ இன்னும் உளேன் - அவற்றை இகழ்ந்து ஈண்டு வருதலை நச்சுதலான், யான் இவ்வெல்லையினும் உளேனாயினேன். ('உரன்' என்பது ஆகுபெயர். 'அந்நசையான் உயிர் வாழா நின்றேன்,அஃதில்லையாயின் இறந்துபடுவல்', என்பதாம்.)
Parimelazhagar
(This too is that.) He went desiring strength, with his mind as his companion, not desiring the enjoyment of pleasure, desiring victory, disregarding our being a companion, he went with his own zeal as his companion; desiring his coming, I still exist, because of desiring his disregarding those and coming here, I have come to exist even up to this limit. ('Strength' is a metonymy. The meaning is, 'By that desire I continue to live, if that were not so I would die'.)
Machine translation from the Tamil
சாலமன் பாப்பையா
என்னுடன் இன்பம் நுகர்வதை விரும்பாமல், நான் துணையாவதையும் வெறுத்துத் தன் ஊக்கத்தையே துணையாக எண்ணி, வெற்றி பெறுவதையே விரும்பி என்னைப் பிரிந்தவர், அவற்றை இகழ்ந்து என்னிடம் திரும்ப வருவதை நான் விரும்புவதால் இவ்வளவு காலமும் இருக்கிறேன்.
Meaning in English
On victory intent, His mind sole company he went; And I yet life sustain And long to see his face again

