Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1262

இன்பத்துப்பால்கற்பியல்127. அவர்வயின்விதும்பல்

இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல்கலங்கழியும் காரிகை நீத்து.

ilangkizhAy inRu maRappinen tOLmElkalangkazhiyum kArikai nIttu

Amritha Sutharsan

பொருள் / உரை

முருகா எளிய உரை

ஒளிரும் அணிகலன்களை அணிந்த தோழியே! பிரிவுத் துயரால் வருந்தும் இந்த ஒருநாளிலாவது நான் காதலரை நினைக்காமல் மறந்துவிட்டால், என் தோள்களிலிருந்து இயற்கை அழகு முற்றிலும் நீங்கி, அணிந்திருக்கும் வளையல்களும் தாமே கழன்று விழுந்துவிடும்!

• இலங்கு இழாய் = ஒளிரும் அணிகலன்களை அணிந்த தோழியே!• இன்று மறப்பின் = பிரிவுத் துயரால் வருந்தும் இந்த ஒருநாளிலாவது நான் காதலரை நினைக்காமல் மறந்துவிட்டால்;• என் தோள் மேல் = என் தோள்களிலிருந்து,• காரிகை நீத்து = இயற்கை அழகு முற்றிலும் நீங்கி,• கலம் கழியும் = அணிந்திருக்கும் வளையல்களும் தாமே கழன்று விழுந்துவிடும்!

மு.வரதராசன்

தோழி! காதலரின் பிரிவால்துன்புற்று வருந்துகின்ற இன்றும் அவரை மறந்து விட்டால், அழகு கெட்டு என் தோள் மேல் அணிந்துள்ள அணிகள் கழலுமாறு நேரும்.

பரிமேலழகர்

(ஆற்றாமை மிகுதலின் இடையின்றி நினைக்கற்பாலை யல்லை; சிறிது மறக்கல் வேண்டும், என்ற தோழிக்குச் சொல்லியது.) இலங்கு இழாய் - விளங்காநின்ற இழையினை யுடையாய்; இன்று மறப்பின் - காதலரை இன்று யான் மறப்பேனாயின்; மேல் காரிகை நீத்து என்தோள் கலங்கழியும் - மேலும் காரிகை என்னை நீப்ப என் தோள்கள் வளை கழல்வனவாம். ('இலங்கிழாய்' என்பது 'இதற்கு நீ யாதும் பரியலை' என்னும் குறிப்பிற்று. இன்று - யான் இறந்துபடுகின்ற இன்று. மேலும் - மறுபிறப்பினும். எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. 'நீப்ப' என்பது , 'நீத்து' எனத் திரிந்து நின்றது. கழியும் என்னும் இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது.'இவ்வெல்லைக்கண் நினைந்தால் மறுமைக்கண் அவரை எய்தி இன்புறலாம், அதனான் மறக்கற்பாலேன் அல்லேன்',என்பதாம்.)

சாலமன் பாப்பையா

ஒளிரும் நகை அணிந்தவனே! என் காதலரை நான் இன்று மறந்தால் என்னைவிட்டு அழகு மிகுதியும் நீங்க, என் தோளும் வளையல்களை இழக்கும்.

Meaning in English

O thou with gleaming jewels decked, could I forget for this one day, Henceforth these bracelets from my arms will slip, my beauty worn away

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout