நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோபுணர்ந்தூடி நிற்பேம் எனல்.
niNantIyil iTTanna nenjsinArk kuNTOpuNarntUTi niRpEm enal
VY THA RA MOORTHI வை தா ர மூர்த்தி
பொருள் / உரை
முருகா எளிய உரை
கொழுப்பைத் தீயிலே போட்டால் உருகுவது போலக் காதலரைக் கண்ட உடனேயே கரையும் நெஞ்சுடைய பெண்களுக்கு, காதலர் தழுவ வரும்போது ஊடல் கொண்டு பிணங்கி அந்நிலையிலேயே உறுதியாய் நிற்போம் என்ற செயல் ஒருபோதும் சாத்தியமாகாது!
• நிணம் தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு = கொழுப்பைத் தீயிலே போட்டால் உருகுவது போலக் காதலரைக் கண்ட உடனேயே கரையும் நெஞ்சுடைய பெண்களுக்கு;• புணர்ந்து ஊடி நிற்பேம் எனல் உண்டோ = காதலர் தழுவ வரும்போது ஊடல் கொண்டு பிணங்கி அந்நிலையிலேயே உறுதியாய் நிற்போம் என்ற செயல் சாத்தியமாகுமோ? (ஒருபோதும் முடியாது).
மு.வரதராசன்
கொழுப்பைத் தீயில் இட்டால் போன்ற உருகும் நெஞ்சுடைய என்னைப் போன்றவர்க்கு, இசைந்து ஊடி நிற்போம் என்று ஊடும் தன்மை உண்டோ?
பரிமேலழகர்
(இதுவும் அது.) நிணம் தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு - நிணத்தைத் தீயின்கண்ணே யிட்டால் அஃது உருகுமாறு போலத் தம் காதலரைக் கண்டால் நிறையழிந்து உருகும் நெஞ்சினையுடைய மகளிர்க்கு; புணர்ந்து ஊடி நிற்பேம் எனல் உண்டோ - அவர் புணர யாம் ஊடிப் பின்பு உணராது அந்நிலையே நிற்கக்கடவேம் என்று கருதுதல் உண்டாகுமோ? ஆகாது. (புணர்தல் - ஈண்டு மிக நணுகுதல்; எதிர்ப்படுதலுமாம். 'புணர' என்பது 'புணர்ந்து' எனத் திரிந்து நின்றது. 'யான் அத்தன்மையேன் ஆகலின் எனக்கு அஃது இல்லையாயிற்று', என்பதாம்.)
சாலமன் பாப்பையா
கொழுப்பைத் தீயிலே போட்டால் அது உருகுவது போலத் தம் காதலரைக் கண்டால் மன அடக்கம் இன்றி உருகும் நெஞ்சினையுடைய பெண்களுக்கு, அவர் கூடவும், நாம் ஊடவும் பின்பு ஏதும் தெரியாத நிலையிலேயே நிற்போம் என்ற நிலை உண்டாகுமோ?
Meaning in English
'We 'll stand aloof and then embrace': is this for them to say, Whose hearts are as the fat that in the blaze dissolves away





