Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1259

இன்பத்துப்பால்கற்பியல்126. நிறையழிதல்

புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்கலத்தல் உறுவது கண்டு.

pulappal enassenREn pullinEn nenjsamkalattal uRuvatu kaNTu

Jaishree Suresh

பொருள் / உரை

முருகா எளிய உரை

சொல் பொருள் (பதவுரை):• புலப்பல் எனச் சென்றேன் = காதலர் வந்தபோது அவரிடம் பிணங்கி ஊடல் கொள்ள வேண்டும் என்று கருதி விலகிப் போனேன்;• நெஞ்சம் கலத்தல் உறுவது கண்டு = ஆனால் என் நெஞ்சமே மன அடக்கத்தை இழந்து அவரோடு கலக்கத் துடிப்பதை அறிந்து,• புல்லினேன் = வேறு வழியின்றி உடனே அவரை இறுகத் தழுவிக் கொண்டேன்!எளிய விளக்கம்:காதலர் வந்தபோது அவரிடம் பிணங்கி ஊடல் கொள்ள வேண்டும் என்று கருதி விலகிப் போனேன்; ஆனால் என் நெஞ்சமே மன அடக்கத்தை இழந்து அவரோடு கூடத் துடிப்பதை அறிந்து, வேறு வழியின்றி உடனே அவரை இறுகத் தழுவிக் கொண்டேன்!

மு.வரதராசன்

ஊடுவேன் என்று எண்ணிக் கொண்டு சென்றேன்; ஆனால் என் நெஞ்சம் என்னை விட்டு அவரோடு கூடுவதை கண்டு தழுவினேன்.

பரிமேலழகர்

(இதுவும் அது.) புலப்பல் எனச் சென்றேன் - அவர் வந்த பொழுது புலக்கக் கடவேன் என்று கருதி, முன் நில்லாது பிறிதோரிடத்துப் போயினேன்; நெஞ்சம் கலத்தலுறுவது கண்டு புல்லினேன் - போயும், என் நெஞ்சம் நிறையின் நில்லாது அறைபோய் அவரோடு கலத்தல் தொடங்குதலை அறிந்து, 'இனி அது வாயாது' என்று புல்லினேன் (வாயாமை - புலத்தற்கருவியாய நெஞ்சு தானே கலத்தற்கருவியாய் நிற்றலின் அது முடியாமை.)

சாலமன் பாப்பையா

அவர் வந்தபோது ஊடல் கொள்ளலாம் என்று எண்ணி, அவர்முன் நில்லாது அப்பால் போனேன்; நான் போன போதும், என் நெஞ்சம் அடக்கம் இல்லாமல் அவரோடு கலக்கத் தொடங்குவதைக் கண்டு இனி அது முடியாது என்று அவரைத் தழுவினேன்.

Meaning in English

'I 'll shun his greeting'; saying thus with pride away I went: I held him in my arms, for straight I felt my heart relent

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout