Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1258

இன்பத்துப்பால்கற்பியல்126. நிறையழிதல்

பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்பெண்மை உடைக்கும் படை.

panmAyak kaLvan paNimozhi anROnampeNmai uTaikkum paTai

Keerthana Parthiepan

பொருள் / உரை

முருகா எளிய உரை

நமது மன அடக்கமாகிய (நாணமும் நிறையும் கொண்ட) அரணை உடைத்து எறியும் சிறந்த போர்ப் படையானது, பல மாயப் பொய்களைச் சொல்ல வல்ல கள்வனான நம் காதலனின் தாழ்ந்து பேசும் இனிய பணிவான சொற்கள்தானே!

• நம் பெண்மை உடைக்கும் படை = நமது மன அடக்கமாகிய (நாணமும் நிறையும் கொண்ட) அரணை உடைத்து எறியும் சிறந்த போர்ப் படையானது,• பல் மாயக் கள்வன் = பல மாயப் பொய்களைச் சொல்ல வல்ல கள்வனான நம் காதலனின்,• பணிமொழி அன்றோ = தாழ்ந்து பேசும் இனிய பணிவான சொற்கள்தானே!

மு.வரதராசன்

நம்முடைய பெண்மையாகிய அரணை அழிக்கும் படையாக இருப்பது, பல மாயங்களில் வல்ல, கள்வனான காதலரடைய பணிவுடைய மொழி அன்றோ?

பரிமேலழகர்

(இதுவும் அது.) நம் பெண்மை உடைக்கும் படை - நம் நிறையாகிய அரணை அழிக்கும் தானை; பல் மாயக் கள்வன் பணிமொழியன்றோ - பல பொய்களை வல்ல கள்வனுடைய தாழ்ந்த சொற்களன்றோ? ஆனபின் அது நிற்குமாறென்னை?(பெண்மை ஈண்டுத் தலைமைபற்றி நிறைமேல் நின்றது. 'வந்தாற் புலக்கக் கடவேம்' என்றும், 'புலந்தால் அவன் சொற்களானும் செயல்களானும் நீங்கேம்' என்றும், இவை முதலாக எண்ணிக்கொண்டிருந்தன யாவும் காணாது கலவிக்கண் தன்னினும் முற்படும் வகை வந்து தோன்றினான் என்பாள், 'பன்மாயக்கள்வன்' என்றாள். பணிமொழி - தம்மினும் தான் அன்பு மிகுதியுடையனாகச் சொல்லுஞ் சொற்கள். 'அவன்அத்தன்மையனாக, சொற்கள் அவையாக, நம் நிறையழியாயது ஒழியுமோ'? என்பதாம்.)

சாலமன் பாப்பையா

என் மன அடக்கமாகிய கோட்டையை அழிக்கும் ஆயுதம், பல பொய்த் தொழிலும் வல்ல இந்த மனத்திருடனின் பணிவான சொற்கள் அன்றோ!

Meaning in English

The words of that deceiver, versed in every wily art, Are instruments that break through every guard of woman's heart

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout