Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1255

இன்பத்துப்பால்கற்பியல்126. நிறையழிதல்

செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்உற்றார் அறிவதொன்று அன்று.

seRRArpin sellAp peruntakaimai kAmanOyuRRAr aRivaton RanRu

VY THA RA MOORTHI வை தா ர மூர்த்தி

பொருள் / உரை

முருகா எளிய உரை

நம்மைப் பொருட்படுத்தாமல் பிரிந்து சென்ற காதலரின் பின்னே ஓடாமல் மானத்தோடு தடுத்து நிற்கும் பெருந்தன்மை, காதல் நோயால் பற்றி எரியும் என்னைப் போன்ற எளிய பெண்களால் அறிய முடியாத ஒன்றாகும்!

• செற்றார் பின் செல்லா = நம்மைப் பொருட்படுத்தாமல் பிரிந்து சென்ற காதலரின் பின்னே ஓடாமல்,• பெருந்தகைமை = மானத்தோடு அமைதியாகத் தடுத்து நிற்கும் பெருந்தன்மை,• காம நோய் உற்றார் அறிவது ஒன்று அன்று = காதல் நோயால் பற்றி எரியும் என்னைப் போன்ற எளிய பெண்களால் அறிய முடியாத ஒன்றாகும்!

மு.வரதராசன்

தம்மை வெறுத்து நீங்கியவரின் பின் செல்லாமல் மானத்தோடு நிற்கும் பெருந்தகைமை, காமநோய் உற்றவர் அறியும் தன்மையது அனறு.

பரிமேலழகர்

(இதுவும் அது.) செற்றவர் பின் சேறல் வேண்டி - என்னை அகன்று சென்றார் பின்னே யான் சேறலை வேண்டுதலான்; என்னை உற்ற துயர் எற்று அளித்து - என்னை உற்ற துயர் எத்தன்மையது? சால நன்று. (செற்றவர் என்றது ஈண்டும், அப்பொருட்டு. 'வேண்ட' என்பது, 'வேண்டி' எனத் திரிந்து நின்றது. 'அளித்து' என்பது இகழ்ச்சிக் குறிப்பு. 'இக்காமநோய் யான் சொல்லவும் கேட்கவும் ஆவதொன்றன்று; சாலக்கொடிது' என்பதாம்.)

சாலமன் பாப்பையா

தன்னைப் பிரிந்து சென்றவர் பின்னே செல்லாது, தானும் அவரை விட்டுப் பிரிந்து நிற்கும் மன அடக்கத்தைக் காதல் நோயை அறியாதவர் பெற முடியும். அறிந்தவரால் பெற முடியாது.

Meaning in English

The dignity that seeks not him who acts as foe, Is the one thing that loving heart can never know

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout