Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1254

இன்பத்துப்பால்கற்பியல்126. நிறையழிதல்

நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்மறையிறந்து மன்று படும்.

niRaiyuTaiyEn enpEnman yAnOven kAmammaRaiyiRantu manRu paTum

Meenakshi

பொருள் / உரை

முருகா எளிய உரை

நான் இதுவரை என்னை மன அடக்கமும் உறுதியும் உடையவள் என்றே பெருமையோடு நினைத்திருந்தேன்; ஆனால் என் காதல் வேட்கையோ, என் மறைத்தலையும் மனக்கட்டுப்பாட்டையும் கடந்து ஊர் மன்றத்திலே பலரும் அறியும்படி வெளிப்பட்டு நிற்கின்றது!

• யான் நிறை உடையேன் என்பேன் = நான் இதுவரை என்னை மன அடக்கமும் உறுதியும் உடையவள் என்றே பெருமையோடு நினைத்திருந்தேன்;• என் காமம் = ஆனால் என் காதல் வேட்கையோ,• மறை இறந்து = என் மறைத்தலையும் மனக்கட்டுப்பாட்டையும் கடந்து,• மன்றுபடும் = ஊர் மன்றத்திலே பலரும் அறியும்படி வெளிப்பட்டு நிற்கின்றது!

மு.வரதராசன்

யான் இதுவரையில் நிறையோடிருப்பதாக எண்ணிக கொண்டிருந்தேன். ஆனால் என் காமம் என்னுள் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்தில் வெளிப்படுகின்றது.

பரிமேலழகர்

(இதுவும் அது.) யான் நிறையுடையேன் என்பேன் - இன்றினூங்கெல்லாம் யான் என்னை நிறையுடையேன் என்று கருதியிருந்தேன்; என் காமம் மறை இறந்து மன்றுபடும் - இன்று என் காமம் மறைத்தலைக் கடந்து மன்றின்கண் வெளிப்படா நின்றது. (மன்னும் ஓவும் மேலவற்றின்கண் வந்தன, மன்று படுதல் - பலரும் அறிதல். 'இனித் தன் வரைத்து அன்று' என்பதாம்.)

சாலமன் பாப்பையா

இன்றுவரை நான் என்னை மன அடக்கம் உடையவள் என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் இன்றோ என் காதல் ஆசை, மறைத்தலைக் கடந்து ஊரவர் அறிய வெளிப்பட்டுவிட்டது.

Meaning in English

In womanly reserve I deemed myself beyond assail; But love will come abroad, and casts away the veil

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout