Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1253

இன்பத்துப்பால்கற்பியல்126. நிறையழிதல்

மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்தும்மல்போல் தோன்றி விடும்.

maRaippEnman kAmattai yAnO kuRippinRittummalpOl tOnRi viTum

திருக்குறள் / THIRUKKURAL

பொருள் / உரை

முருகா எளிய உரை

என் காதல் வேட்கையை யாருக்கும் தெரியாமல் என்னுள்ளேயே மறைத்து வைக்கவே நினைக்கின்றேன்; ஆனால் அது என் கட்டுப்பாட்டிற்குள் அடங்கி நிற்காமல், நாம் அடக்க நினைத்தாலும் தன்னால் வெளிப்பட்டுவிடும் தும்மலைப் போல் ஊரறிய வெளிப்பட்டு விடுகின்றது!

• யான் காமத்தை மறைப்பேன் = என் காதல் வேட்கையை யாருக்கும் தெரியாமல் என்னுள்ளேயே மறைத்து வைக்கவே நினைக்கின்றேன்;• குறிப்பு இன்றி = ஆனால் அது என் கட்டுப்பாட்டிற்குள் நிற்காமல்,• தும்மல் போல் தோன்றிவிடும் = நாம் அடக்க நினைத்தாலும் தானே வெளிப்படும் தும்மலைப் போல் ஊரறிய வெளிப்பட்டு விடுகின்றது!

மு.வரதராசன்

யான் காமத்தை என்னுள்‌ளே மறைக்க முயல்வேன்; ஆனால் அதுவே என் குறிப்பின்படி நிற்காமல் தும்மல் போல் தானே வெளிப்பட்டு விடுகிறது.

பரிமேலழகர்

(மகளிர் காமம் மறைக்கப்படும், என்றாட்குச் சொல்லியது.) காமத்தை யான் மறைப்பேன் - இக்காமத்தை யான் என்னுள்ளே மறைக்கக் கருதுவேன்; குறிப்பு இன்றித் தும்மல் போல் தோன்றிவிடும் - அதனாலென், இஃது என் கருத்தின் வாராது தும்மல் போல் வெளிப்பட்டே விடாநின்றது. ('மன்' ஒழியிசைக் கண் வந்தது. ஓகாரம் இரங்கற்கண் வந்தது. 'தும்மல் அடங்காதாற் போல அடங்குகின்றதில்லை' என்பதாம்.)

சாலமன் பாப்பையா

என் காதல் ஆசையை நான் மறைக்கவே எண்ணுவேன்; ஆனால், அது எனக்கும் தெரியாமல் தும்மலைப் போல் வெளிப்பட்டு விடுகிறது.

Meaning in English

I would my love conceal, but like a sneeze It shows itself, and gives no warning sign

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout