Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1248

இன்பத்துப்பால்கற்பியல்125. நெஞ்சொடுகிளத்தல்

பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு.

parintavar nalkAren REngkip pirintavarpinselvAy pEtaiyen nenjsu

Sahana Arunagiri

பொருள் / உரை

முருகா எளிய உரை

ஒன்றுமறியாத என் பேதை நெஞ்சமே! 'நம் பிரிவுத் துன்பத்தை அறியாமல் அவர் அன்பு செய்ய வரவில்லையே' என்று ஏங்கி, நம்மைத் தனியே விட்டுப் பிரிந்து சென்றவரின் பின்னாலேயே ஓடிச் செல்கின்றாயே!

• பேதை என் நெஞ்சு = ஒன்றுமறியாத என் பேதை நெஞ்சமே!• பரிந்தவர் நல்கார் என்று ஏங்கி = 'பிரிவுத் துன்பத்தை அறியாமல் அவர் அன்பு செய்ய வரவில்லையே' என்று ஏங்கி,• பிரிந்தவர் பின் செல்வாய் = நம்மைத் தனியே விட்டுப் பிரிந்து சென்றவரின் பின்னாலேயே ஓடிச் செல்கின்றாயே!

மு.வரதராசன்

என் நெஞ்சே! பிரிவுத் துன்பத்தால் வருந்தி அவர் வந்து அன்பு செய்ய வில்லையே என்று ஏங்கி பிரிந்தவரின் பின் செல்கின்றாய் பேதை.

பரிமேலழகர்

(இதுவும் அது) என் நெஞ்சு - என் நெஞ்சே; அவர் பிரிந்து நல்கார் என்று - அவர் இவ்வாற்றாமையை அறியாமையின் நொந்து வந்து தலையளி செய்யாராயினார் என்று கருதி; பிரிந்தவர்பின் ஏங்கிச் செல்வாய் பேதை- அறிவித்தற் பொருட்டு நம்மைப் பிரிந்து போயவர்பின் ஏங்கிச் செல்லலுற்ற நீ யாதும் அறியாய் (ஆற்றாமை கண்டு வைத்தும் நல்காது போயினாரைக் காணா வழிச்சென்று அறிவித்த துணையானே நல்க வருவர் என்று கருதினமையின் 'பேதை' என்றாள்.)

சாலமன் பாப்பையா

என் நெஞ்சே! நம் பிரிவுத் துன்பத்தை அவர் அறியார். அதனால் வருந்தி அவர் நம்மீது அன்பு காட்டாமல் இருக்கின்றார் என்று எண்ணி, நம் நிலையை அவர்க்குக் கூறுவதற்காக, அவர் பின்னே ஏங்கிச் செல்லும் நீ ஏதும் அறியாத பேதையே!

Meaning in English

Thou art befooled, my heart, thou followest him who flees from thee; And still thou yearning criest: 'He will nor pity show nor love to me.'

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout