Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1249

இன்பத்துப்பால்கற்பியல்125. நெஞ்சொடுகிளத்தல்

உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீயாருழைச் சேறியென் நெஞ்சு.

uLLattAr kAta lavarAka uLLinIyAruzhais sERiyen nenjsu

Sangeetha Parthe Bhaskar

பொருள் / உரை

முருகா எளிய உரை

என் நெஞ்சமே! காதலர் எப்போதுமே உன்னுடைய உள்ளத்திற்குள்ளேயே வீற்றிருக்கின்றார்; அப்படியிருக்க, நீ அவரை நினைத்து வெளியே யாரிடம் தேடி ஓடுகின்றாய்?

• என் நெஞ்சு = என் நெஞ்சமே!• காதலவர் உள்ளத்தார் ஆக = காதலர் எப்போதுமே உன்னுடைய உள்ளத்திற்குள்ளேயே வீற்றிருக்கின்றார்;• நீ உள்ளி யாருழைச் சேறி = அப்படியிருக்க, நீ அவரை நினைத்து வெளியே யாரிடம் தேடி ஓடுகின்றாய்?

மு.வரதராசன்

என் நெஞ்சே! காதலர் உன் உள்ளத்தில் உள்ளவராக இருக்கும்போது நீ அவரை நினைத்து யாரிடம் தேடிச் செல்கின்றாய்?

பரிமேலழகர்

(இதுவும் அது.) என் நெஞ்சு - என் நெஞ்சே; காதலவர் உள்ளத்தாராக - காதலர் நின்னகத்தாராக; நீ உள்ளி யாருழைச் சேறி - முன்பெல்லாம் கண்டு வைத்து இப்பொழுது நீ புறத்துத் தேடிச் செல்கின்றது யாரிடத்து? ('உள்ளம்' என்புழி 'அம்' பகுதிப் பொருள் விகுதி. 'நின்னகத்திருக்கின்றவரை அஃது அறியாது புறத்துத் தேடிச் சேறல் நகை உடைத்து, அதனை ஒழி' என்பதாம்.)

சாலமன் பாப்பையா

என் நெஞ்சே! நம் அன்பர் நம் மனத்திற்குள்ளேயே இருக்க, நீ அவரைத் தேடி எவரிடம் போகிறாய்?

Meaning in English

My heart! my lover lives within my mind; Roaming, whom dost thou think to find

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout