Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1245

இன்பத்துப்பால்கற்பியல்125. நெஞ்சொடுகிளத்தல்

செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்உற்றால் உறாஅ தவர்.

seRRAr enakkai viTaluNTO nenjsEyAmuRRAl uRAa tavar

Sivasri Skandaprasad

பொருள் / உரை

முருகா எளிய உரை

என் நெஞ்சமே! நாம் அவர்மேல் பேரன்பு காட்டியபோதும் நம்மேல் அன்பு கொள்ளாமல் பிரிந்து சென்ற அவரை, 'நம்மை வெறுத்துவிட்டார்' என்று கருதி நாமும் அவரை மறந்து கைவிட்டுவிடும் நெஞ்சுறுதி நமக்கு உண்டோ? (ஒருபோதும் இல்லை).

• நெஞ்சே = என் நெஞ்சமே!• யாம் உற்றால் உறாஅதவர் = நாம் அவர்மேல் பேரன்பு கொண்டபோதும் நம்மேல் அன்பு கொள்ளாத அவரை,• செற்றார் எனக் கைவிடல் உண்டோ = 'நம்மை வெறுத்துவிட்டார்' என்று கருதி நாமும் அவரை மறந்து கைவிட்டுவிடும் நெஞ்சுறுதி நமக்கு உண்டோ? (இல்லை).

மு.வரதராசன்

நெஞ்சே! யாம் விரும்பி நாடினாலும் எம்மை நாடாத அவர் நம்மை வெறுத்து விட்டார் என்று எண்ணிக் கைவிட முடியும‌ோ?

பரிமேலழகர்

இதுவும் அது.) நெஞ்சே - நெஞ்சே; யாம் உற்றால் உறாஅதவர் - யாம் தம்மையுறத் தாம் உறாத நம் காதலரை; செற்றாரெனக் கைவிடல் உண்டோ - வெறுத்தார் என்று கருதிப் புலந்து கைவிட்டிருக்கும் வலி நமக்குண்டோ? இல்லை.(உறுதல் - அன்பு படுதல். 'அவ்வலி யின்மையின் அவர்பால் செல்வதே நமக்குத் தகுவது' என்பதாம்.)

சாலமன் பாப்பையா

நெஞ்சே! நான் அவர்மீது அன்பு காட்டியும், என்மீது அன்பு காட்டாத அவரை, நம்மை வெறுத்தவர் என்று எண்ணிக் கைவிடும் உள்ள உறுதி எனக்கு உண்டோ?

Meaning in English

O heart, as a foe, can I abandon utterly Him who, though I long for him, longs not for me

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout