இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்பைதல்நோய் செய்தார்கண் இல்.
iruntuLLi enparital nenjsE parintuLLalpaitalnOy seytArkaN il
திருக்குறள் / THIRUKKURAL
பொருள் / உரை
முருகா எளிய உரை
சொல் பொருள் (பதவுரை):• நெஞ்சே = என் நெஞ்சமே!• பைதல் நோய் செய்தார் கண் = நமக்கு இந்தத் துன்ப நோயைத் தந்து பிரிந்து சென்றவரிடம்,• பரிந்து உள்ளல் இல் = நம்மேல் இரக்கப்பட்டுத் திரும்பி வரும் அன்பு எண்ணம் சிறிதும் இல்லை;• இருந்து உள்ளிப் பரிதல் என் = அப்படியிருக்க, நீ இங்கிருந்தபடியே அவரை நினைத்து உருகி வருந்துவதால் என்ன பயன்?எளிய விளக்கம்:என் நெஞ்சமே! நமக்கு இந்தத் துன்ப நோயைத் தந்து பிரிந்து சென்றவரிடம் நம்மேல் இரக்கப்பட்டுத் திரும்பி வரும் அன்பு எண்ணம் சிறிதும் இல்லை; அப்படியிருக்க, நீ இங்கிருந்தபடியே அவரை நினைத்து உருகி வருந்துவதால் என்ன பயன்?
மு.வரதராசன்
நெஞ்சே (என்னுடன்) இருந்து அவரை நினைந்து வருந்துவது ஏன்? இந்தத் துன்பநோயை உண்டாக்கியவரிடம் இவ்வாறு அன்பு கொண்டு நினைக்கும் தன்மை இல்லையே!
பரிமேலழகர்
(இதுவும் அது.) நெஞ்சே இருந்து உள்ளிப் பரிதல் என் - நெஞ்சே! அவர்பால் செல்வதும் செய்யாது ஈண்டு இறந்து படுவதும் செய்யாதிருந்து அவர் வரவு நினைந்து நீ வருந்துகின்றது என்னை? பைதல் நோய் செய்தார் கண் பரிந்து உள்ளல் இல் - இப்பையுள் நோய் செய்தார் மாட்டு நமக்கு இரங்கிவரக் கருதுதல் உண்டாகாது ('நம்மாட்டு அருளுடையர் அன்மையின், தாமாக வாரார், நாம் சேறலே இனித்தகுவது' என்பதாம்.)
சாலமன் பாப்பையா
நெஞ்சே! அவர் இருக்கும் இடத்திற்கும் போகாமல், இங்கே இறந்தும் போகாமல், இங்கிருந்தபடியே அவர் வருவதை எண்ணி நீ வருந்துவது ஏன்? நமக்கு இந்தத் துன்ப நோயைத் தந்தவர்க்கு நம்மீது இரக்கப்படும் எண்ணம் இல்லை.
Meaning in English
What comes of sitting here in pining thought, O heart? He knows No pitying thought, the cause of all these wasting woes





