நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்எவ்வநோய் தீர்க்கும் மருந்து.
ninaittonRu sollAyO nenjsE enaittonRumevvanOy tIrkku maruntu
DD-Media-29
பொருள் / உரை
முருகா எளிய உரை
என் நெஞ்சமே! எத்தகைய மருந்தாக இருந்தாலும் சரி, எதனாலும் தீர்க்க முடியாத இந்தத் துன்பக் காதல் நோயைத் தீர்க்கக்கூடிய ஒரு சிறந்த மருந்தை நீயாவது சிந்தித்துப் பார்த்து எனக்குச் சொல்ல மாட்டாயா?
• நெஞ்சே = என் நெஞ்சமே!• எனைத்து ஒன்றும் = எத்தகைய மருந்தாக இருந்தாலும் சரி,• எவ்வ நோய் தீர்க்கும் = தீராத இந்தத் துன்பக் காதல் நோயைத் தீர்க்கக்கூடிய,• மருந்து ஒன்று நினைத்துச் சொல்லாயோ = ஒரு நல்ல மருந்தை நீயாவது ஆராய்ந்து எனக்குச் சொல்ல மாட்டாயா?
மு.வரதராசன்
நெஞ்சே! ( காதலால் வளர்ந்த) இத் துன்ப நோயைத் தீர்க்கும் மருந்து ஏதாவது ஒன்றை நீ நினைத்துப் பார்த்து எனக்குச் சொல்ல மாட்டாயோ?
பரிமேலழகர்
(தன் ஆற்றாமை தீரும் திறன் நாடியது.) நெஞ்சே - நெஞ்சே; எவ்வநோய் தீர்க்கும் மருந்து ஒன்று - இவ்வெவ்வநோயினைத் தீர்க்கும் மருந்தாவதொன்றனை; எனைத்து ஒன்றும் நினைத்துச் சொல்லாய் - யான் அறியுமாற்றலிலன், எத்தன்மையது யாதொன்றாயினும் நீ அறிந்து எனக்குச் சொல். (எவ்வம் - ஒன்றானும் தீராமை. உயிரினும் சிறந்த நாணினை விட்டுச் செய்வது யாதொன்றாயினும் என்பாள், 'எனைத்தொன்றும்' என்றாள்.)
சாலமன் பாப்பையா
நெஞ்சே! எதனாலும் தீராத என் நோயைத் தீர்க்கும் மருந்து ஏதாவது ஒன்றை எண்ணிப் பார்த்துச் சொல்லமாட்டாயா?
Meaning in English
My heart, canst thou not thinking of some med'cine tell, Not any one, to drive away this grief incurable





